திருப்பாடல்கள் 60

முந்திய அடுத்த
1⁽கடவுளே! நீர் எங்களை␢ வெறுத்து ஒதுக்கிவிட்டீர்;␢ எங்களை நொறுக்கிவிட்டீர்;␢ எங்கள்மீது சீற்றம் கொண்டீர்;␢ இப்பொழுதோ, எங்களை நோக்கித்␢ திரும்பியருளும்.⁾ 2⁽நிலத்தை நீர் அதிரச் செய்தீர்;␢ அதில் பிளவு உண்டாகச் செய்தீர்;␢ அதன் வெடிப்புகளைச் சீர்ப்படுத்தும்,␢ அது ஆட்டம் கண்டுள்ளது;⁾ 3⁽உம் மக்களைக்␢ கடும் துன்பத்தைக் காணச் செய்தீர்;␢ மதியை மயக்கும் மதுவை␢ எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.⁾ 4⁽உமக்கு அஞ்சி நடப்போர்␢ எதிரிகளின் அம்பினின்று␢ தப்பித்துக்கொள்ளுமாறு␢ அவர்களுக்கெனக்␢ கொடி ஒன்றை ஏற்றிவைத்தீர். (சேலா)⁾ 5⁽உம் அன்பர்கள் விடுதலை பெறுமாறு,␢ உமது வலக்கரத்தால்␢ எங்களுக்குத் துணை செய்யும்;§ எங்கள் விண்ணப்பத்திற்குப் பதிலளியும்!⁾ 6⁽கடவுள் தமது தூயகத்தினின்று␢ இவ்வாறு உரைத்தார்;␢ வெற்றிக் களிப்பிடையே␢ செக்கேமைப் பங்கிடுவேன்;␢ சுக்கோத்துப் பள்ளத்தாக்கை␢ அளந்து கொடுப்பேன்.⁾ 7⁽கிலயாது என்னுடையது;␢ மனாசேயும் என்னுடையதே;␢ எப்ராயிம் என் தலைச்சீரா;␢ யூதா என் செங்கோல்!⁾ 8⁽மோவாபு எனக்குப்␢ பாதம்கழுவும் பாத்திரம்;␢ ஏதோமின்மீது␢ என் மிதியடியை எறிவேன்;␢ பெலிஸ்தியாவை வென்று ஆர்ப்பரிப்பேன்.⁾ 9⁽அரண்சூழ் நகரினுள்␢ என்னை இட்டுச் செல்பவர் யார்?␢ ஏதோம் வரை␢ என்னைக் கூட்டிச் செல்பவர் யார்?⁾ 10⁽கடவுளே! நீர் எங்களைக்␢ கைவிட்டு வீட்டீர் அன்றோ!␢ கடவுளே! நீர் எங்கள் படைகளோடு␢ புறப்படவில்லை அன்றோ!⁾ 11⁽எதிரியை மேற்கொள்ள␢ எங்களுக்கு உதவும்;␢ மனிதர் தரும் உதவியோ வீண்;⁾ 12⁽கடவுளின் துணையால்␢ வீரத்துடன் போரிடுவோம்;␢ அவரே நம் எதிரிகளை மிதித்து விடுவார்.⁾