திருப்பாடல்கள் 79

முந்திய அடுத்த
1⁽கடவுளே, வேற்று நாட்டினர்␢ உமது உரிமைச் சொத்தினுள்␢ புகுந்துள்ளனர்;␢ உமது திருக்கோவிலைத்␢ தீட்டுப்படுத்தியுள்ளனர்;␢ எருசலேமைப் பாழடையச் செய்தனர்.⁾ 2⁽உம் ஊழியரின் சடலங்களை␢ வானத்துப் பறவைகளுக்கு உணவாகவும்␢ உம் பற்றுமிகு அடியாரின் உடல்களைக்␢ காட்டு விலங்குகளுக்கு உணவாகவும்␢ அவர்கள் அளித்துள்ளார்கள்;⁾ 3⁽அவர்களின் இரத்தத்தைத் தண்ணீரென␢ எருசலேமைச் சுற்றிலும்␢ அள்ளி இறைத்தார்கள்;␢ அவர்களை அடக்கம் செய்ய எவரும் இல்லை.⁾ 4⁽எங்களை அடுத்து வாழ்வோரின்␢ பழிச்சொல்லுக்கு இலக்கானோம்;␢ எங்களைச் சூழ்ந்துள்ளோரின்␢ நகைப்புக்கும் ஏளனத்திற்கும் § ஆளாகிவிட்டோம்.⁾ 5⁽ஆண்டவரே! இன்னும் எவ்வளவு காலம்␢ நீர் சினம் கொண்டிருப்பீர்?␢ என்றென்றுமா?␢ உமது வெஞ்சினம்␢ நெருப்பாக எரியுமோ?⁾ 6⁽உம்மை அறியாத␢ வேற்று நாட்டினர்மீது,␢ உமது பெயரைத் தொழாத␢ அரசர்கள்மீது␢ உம் சினத்தைக் கொட்டியருளும்.⁾ 7⁽ஏனெனில், அவர்கள்␢ யாக்கோபை விழுங்கிவிட்டார்கள்;␢ அவரது உறைவிடத்தைப்␢ பாழாக்கி விட்டார்கள்.⁾ 8⁽எம் மூதாதையரின் குற்றங்களை␢ எம்மீது சுமத்தாதேயும்!␢ உம் இரக்கம் எமக்கு␢ விரைவில் கிடைப்பதாக!␢ நாங்கள் மிகவும்␢ தாழ்த்தப்பட்டிருக்கின்றோம்.⁾ 9⁽எங்கள் மீட்பராகிய கடவுளே!␢ உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு␢ எங்களுக்கு உதவி செய்தருளும்;␢ உமது பெயரை முன்னிட்டு␢ எங்களை விடுவித்தருளும்;␢ எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.⁾ 10⁽‛அவர்களின் கடவுள் எங்கே?’ என்று␢ அண்டை நாட்டினர் § ஏன் சொல்லவேண்டும்?␢ உம்முடைய ஊழியரின்␢ இரத்தத்தைச் சிந்தியதற்காக␢ நீர் அவர்களை,␢ என் கண்ணெதிரே, பழிதீர்த்தருளும்.⁾ 11⁽சிறைப்பட்டோரின் பெருமூச்சு␢ உம் திருமுன் வருவதாக!␢ கொலைத் தீர்ப்புப் பெற்றோரை␢ உம் புயவலிமை காப்பதாக.⁾ 12⁽ஆண்டவரே, எம் அண்டை நாட்டார்␢ உம்மைப் பழித்துரைத்த␢ இழிச்சொல்லுக்காக,␢ ஏழு மடங்கு தண்டனை␢ அவர்கள் மடியில் விழச்செய்யும்.⁾ 13⁽அப்பொழுது உம் மக்களும்,␢ உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள்␢ என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்!␢ தலைமுறைதோறும்␢ உமது புகழை எடுத்துரைப்போம்.⁾