திருப்பாடல்கள் 99

முந்திய அடுத்த
1⁽ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;␢ மக்களினத்தார் கலங்குவராக!␢ அவர் கெருபுகள்மீது␢ வீற்றிருக்கின்றார்;␢ மண்ணுலகம் நடுநடுங்குவதாக!⁾ 2⁽சீயோனில் ஆண்டவர்␢ மேன்மையுடன் விளங்குகின்றார்;␢ எல்லா இனத்தார் முன்பும்␢ மாட்சியுடன் திகழ்கின்றார்.⁾ 3⁽மேன்மையானதும்␢ அஞ்சுதற்கு உரியதுமான␢ அவரது பெயரை␢ அவர்கள் போற்றுவார்களாக!␢ அவரே தூயவர்.⁾ 4⁽வல்லமைமிக்க அரசரே!␢ நீதியை நீர் விரும்புகின்றீர்;␢ நேர்மையை நிலைக்கச் செய்கின்றீர்;␢ யாக்கோபினரிடையே␢ நீதியையும் நேர்மையையும்␢ நீர்தாமே நிலைநாட்டுகின்றீர்.⁾ 5⁽நம் கடவுளாகிய ஆண்டவரைப்␢ பெருமைப்படுத்துங்கள்;␢ அவரது அரியணைமுன்␢ தாள் பணிந்து வணங்குங்கள்; § அவரே தூயவர்!⁾ 6⁽மோசேயும் ஆரோனும்␢ அவர்தம் குருக்கள்;␢ அவரது பெயரால் மன்றாடுவோருள்␢ சாமுவேலும் ஒருவர்;␢ அவர்கள் ஆண்டவரை நோக்கி␢ மன்றாடினர்; அவரும்␢ அவர்களுக்குச் செவிசாய்த்தார்.⁾ 7⁽மேகத் தூணிலிருந்து␢ அவர்களோடு பேசினார்;␢ அவர்கள் அவருடைய␢ ஒழுங்கு முறைகளையும்␢ அவர் அவர்களுக்குத் தந்த␢ நியமங்களையும் கடைப்பிடித்தார்கள்.⁾ 8⁽எங்கள் கடவுளாகிய ஆண்டவரே!␢ நீர் அவர்களுக்குச் செவிசாய்த்தீர்;␢ மன்னிக்கும் கடவுளாக␢ உம்மை வெளிப்படுத்தினீர்;␢ ஆயினும், அவர்களுடைய␢ தீச்செயல்களுக்காய்␢ நீர் அவர்களைத் தண்டித்தீர்.⁾ 9⁽நம் கடவுளாகிய ஆண்டவரைப்␢ பெருமைப்படுத்துங்கள்;␢ அவரது திருமலையில்␢ அவரைத் தொழுங்கள்.␢ ஏனெனில், நம் கடவுளாகிய␢ ஆண்டவரே தூயவர்.⁾