திருப்பாடல்கள் 104

முந்திய அடுத்த
1⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ என் கடவுளாகிய ஆண்டவரே!␢ நீர் எத்துணை மேன்மைமிக்கவர்!␢ நீர் மாண்பையும் மாட்சியையும்␢ அணிந்துள்ளவர்.⁾ 2⁽பேரொளியை␢ ஆடையென அணிந்துள்ளவர்;␢ வான்வெளியைக்␢ கூடாரமென விரித்துள்ளவர்;⁾ 3⁽நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின்␢ அடித்தளத்தை அமைத்துள்ளவர்;␢ கார் முகில்களைத்␢ தேராகக் கொண்டுள்ளவர்;␢ காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றவர்!⁾ 4⁽காற்றுகளை உம்␢ தூதராய் நியமித்துள்ளவர்;␢ தீப்பிழம்புகளை உம்␢ பணியாளராய்க் கொண்டுள்ளவர்.⁾ 5⁽நீவீர் பூவுலகை அதன்␢ அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்;␢ அது என்றென்றும் அசைவுறாது.⁾ 6⁽அதனை ஆழ்கடல்␢ ஆடையென மூடியிருந்தது;␢ மலைகளுக்கும் மேலாக␢ நீர்த்திரள் நின்றது;⁾ 7⁽நீவீர் கண்டிக்கவே அது விலகி ஓடியது;␢ நீவீர் இடியென முழங்க,␢ அது திகைப்புற்று ஓடியது;⁾ 8⁽அது மலைகள்மேல் ஏறி,␢ பள்ளத்தாக்குகளில் இறங்கி,␢ அதற்கெனக் குறித்த இடத்தை␢ அடைந்தது;⁾ 9⁽அது மீறிச்செல்லாதவாறு␢ அதற்கு எல்லை வகுத்தீர்;␢ பூவுலகை அது மீண்டும்␢ மூடிவிடாதபடி செய்தீர்;⁾ 10⁽பள்ளத்தாக்குகளில்␢ நீருற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்;␢ அவை மலைகளிடையே பாய்ந்தோடும்;⁾ 11⁽அவை காட்டு விலங்குகள்␢ அனைத்திற்கும் குடிக்கத் தரும்;␢ காட்டுக் கழுதைகள்␢ தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்;⁾ 12⁽நீருற்றுகளின் அருகில்␢ வானத்துப் பறவைகள்␢ கூடுகட்டிக் கொள்கின்றன;␢ அவை மரக்கிளைகளினின்று␢ இன்னிசை இசைக்கின்றன;⁾ 13⁽உம் மேலறைகளினின்று␢ மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர்;␢ உம் செயல்களின் பணியால்␢ பூவுலகம் நிறைவடைகின்றது.⁾ 14⁽கால்நடைகளுக்கெனப்␢ புல்லை முளைக்கச் செய்கின்றீர்;␢ மானிடருக்கெனப் பயிர்வகைகளை␢ வளரச் செய்கின்றர்;␢ இதனால் பூவுலகினின்று அவர்களுக்கு␢ உணவு கிடைக்கச் செய்கின்றீர்;⁾ 15⁽மனித உளத்திற்கு மகிழ்ச்சியூட்டத்␢ திராட்சை இரசமும்,␢ முகத்திற்குக் களையூட்ட எண்ணெயும்␢ மனித உள்ளத்திற்குப் புத்துணர்வூட்ட␢ அப்பமும் அளிக்கின்றீர்.⁾ 16⁽ஆண்டவரின் மரங்களுக்கு —␢ லெபனோனில் அவர் நட்ட␢ கேதுரு மரங்களுக்கு —␢ நிறைய நீர் கிடைக்கின்றது.⁾ 17⁽அங்கே பறவைகள்␢ கூடுகள் கட்டுகின்றன;␢ தேவதாரு மரங்களில்␢ கொக்குகள் குடியிருக்கின்றன.⁾ 18⁽உயர்ந்த மலைகள்␢ வரையாடுகளுக்குத் தங்குமிடமாகும்;␢ கற்பாறைகள்␢ குழிமுயல்களுக்குப் புகலிடமாகும்.⁾ 19⁽காலங்களைக் கணிக்க␢ நிலவை நீர் அமைத்தீர்;␢ ஆதவன் தான் மறையும்␢ நேரத்தை அறிவான்.⁾ 20⁽இருளை நீர் தோன்றச் செய்யவே,␢ இரவு வருகின்றது;␢ அப்போது, காட்டு விலங்குகள்␢ அனைத்தும் நடமாடும்.⁾ 21⁽இளஞ்சிங்கங்கள் இரைக்காகக்␢ கர்ச்சிக்கின்றன;␢ அவை இறைவனிடமிருந்து␢ தங்கள் உணவைத் தேடுகின்றன.⁾ 22⁽கதிரவன் எழவே அவை திரும்பிச் சென்று␢ தம் குகைகளுக்குள்␢ படுத்துக்கொள்கின்றன.⁾ 23⁽அப்பொழுது மானிடர்␢ வேலைக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்;␢ அவர்கள் மாலைவரை உழைக்கின்றனர்.⁾ 24⁽ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள்␢ எத்தனை எத்தனை!␢ நீர் அனைத்தையும்␢ ஞானத்தோடு செய்துள்ளீர்!␢ பூவுலகம்␢ உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.⁾ 25⁽இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்;␢ அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக␢ வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன.⁾ 26⁽அங்கே கப்பல்கள் செல்கின்றன;␢ அங்கே துள்ளிவிளையாட␢ லிவியத்தானைப் படைத்தீர்!⁾ 27⁽தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று␢ இவையெல்லாம்␢ உம்மையே நம்பியிருக்கின்றன.⁾ 28⁽நீர் கொடுக்க,␢ அவை சேகரித்துக் கொள்கின்றன;␢ நீர் உமது கையைத் திறக்க,␢ அவை நலன்களால் நிறைவுறுகின்றன.⁾ 29⁽நீர் உமது முகத்தை மறைக்க,␢ அவை திகிலடையும்;␢ நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால்,␢ அவை மாண்டு மறுபடியும்␢ புழுதிக்கே திரும்பும்.⁾ 30⁽உமது ஆவியை நீர் அனுப்ப,␢ அவை படைக்கப்பெறுகின்றன;␢ மண்ணகத்தின் முகத்தைப்␢ புதுப்பிக்கின்றீர்.⁾ 31⁽ஆண்டவரின் மாட்சி␢ என்றென்றும் நிலைத்திருப்பதாக!␢ அவர் தம் செயல்களைக் குறித்து␢ மகிழ்வாராக!⁾ 32⁽மண்ணுலகின்மீது␢ அவர் தம் பார்வையைத் திருப்ப,␢ அது நடுங்கும்; மலைகளை அவர் தொட,␢ அவை புகை கக்கும்.⁾ 33⁽நான் வாழும் நாளெல்லாம்␢ ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்;␢ என்னுயிர் உள்ளவரையிலும்␢ என் கடவுளுக்குப் புகழ் சாற்றிடுவேன்.⁾ 34⁽என் தியானப் பாடல்␢ அவருக்கு உகந்ததாய் இருப்பதாக!␢ நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.⁾ 35⁽பாவிகள் பூவுலகினின்று␢ ஒழிந்து போவார்களாக!␢ தீயோர்கள் இனி␢ இல்லாது போவார்களாக!␢ என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு!␢ அல்லேலூயா!⁾