திருப்பாடல்கள் 112

முந்திய அடுத்த
1⁽அல்லேலூயா! ஆண்டவருக்கு␢ அஞ்சிநடப்போர் பேறுபெற்றோர்;␢ அவர்தம் கட்டளைகளில்␢ அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.⁾ 2⁽அவர்களது வழிமரபு பூவுலகில்␢ வலிமைமிக்கதாய் இருக்கும்;␢ நேர்மையுள்ளோரின் தலைமுறை␢ ஆசிபெறும்.⁾ 3⁽சொத்தும் செல்வமும்␢ அவர்களது இல்லத்தில் தங்கும்;␢ அவர்களது நீதி␢ என்றென்றும் நிலைத்திருக்கும்.⁾ 4⁽இருளில் ஒளியென அவர்கள்␢ நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்;␢ அருளும் இரக்கமும் நீதியும்␢ உள்ளோராய் இருப்பர்.⁾ 5⁽மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர்␢ நன்மை அடைவர்;␢ அவர்கள் தம் அலுவல்களில்␢ நீதியுடன் செயல்படுவர்.⁾ 6⁽எந்நாளும் அவர்கள் அசைவுறார்;␢ நேர்மையுள்ளோர்␢ மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.⁾ 7⁽தீமையான செய்தி எதுவும்␢ அவர்களை அச்சுறுத்தாது;␢ ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால்␢ அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.⁾ 8⁽அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்;␢ அவர்களை அச்சம் மேற்கொள்ளாது;␢ இறுதியில் தம் எதிரிகள் அழிவதை␢ அவர்கள் காண்பது உறுதி.⁾ 9⁽அவர்கள் வாரி வழங்கினர்;␢ ஏழைகளுக்கு ஈந்தனர்;␢ அவர்களது நீதி␢ என்றென்றும் நிலைத்திருக்கும்;␢ அவர்களது வலிமை␢ மாட்சியுடன் மேலோங்கும்.⁾ 10⁽தீயோர் அதைப் பார்த்து எரிச்சல் அடைவர்;␢ பல்லை நெரிப்பர்; சோர்ந்து போவர்;␢ தீயோரின் விருப்பமெல்லாம்␢ வீணாய்ப்போம்.⁾