திருப்பாடல்கள் 80

முந்திய அடுத்த
1⁽இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்!␢ யோசேப்பை மந்தையென நடத்திச்␢ செல்கின்றவரே! § கேருபுகளின் மீது வீற்றிருப்பவரே,␢ ஒளிர்ந்திடும்!⁾ 2⁽எப்ராயிம், பென்யமின்,␢ மனாசேயின் முன்னிலையில்␢ உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து␢ எம்மை மீட்க வாரும்!⁾ 3⁽கடவுளே, எங்களை முன்னைய␢ நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்!␢ எம்மை மீட்குமாறு␢ உமது முக ஒளியைக் காட்டியருளும்!⁾ 4⁽படைகளின் கடவுளாம் ஆண்டவரே!␢ உம் மக்களின் வேண்டுதலுக்கு எதிராக␢ எத்தனை நாள் நீர் சினம் கொண்டிருப்பீர்?⁾ 5⁽கண்ணீராம் உணவை␢ அவர்கள் உண்ணச் செய்தீர்;␢ கண்ணீரை அவர்கள்␢ பெருமளவு பருகச் செய்தீர்.⁾ 6⁽எங்கள் அண்டை நாட்டாருக்கு␢ எங்களைச் சர்ச்சைப்பொருள் ஆக்கினீர்;␢ எங்கள் எதிரிகள்␢ எம்மை ஏளனம் செய்தார்கள்.⁾ 7⁽படைகளின் கடவுளே!␢ எங்களை முன்னைய␢ நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்;␢ எம்மை மீட்குமாறு␢ உமது முக ஒளியைக் காட்டியருளும்.⁾ 8⁽எகிப்தினின்று திராட்சைக்செடி␢ ஒன்றைக் கொண்டுவந்தீர்;␢ வேற்றினத்தாரை விரட்டிவிட்டு␢ அதனை நட்டு வைத்தீர்.⁾ 9⁽அதற்கென நிலத்தை␢ ஒழுங்குபடுத்திக் கொடுத்தீர்;␢ அது ஆழ வேரூன்றி␢ நாட்டை நிரப்பியது.⁾ 10⁽அதன் நிழல் மலைகளையும்␢ அதன் கிளைகள்␢ வலிமைமிகு கேதுரு மரங்களையும் மூடின.⁾ 11⁽அதன் கொடிகள் கடல்வரையும்*␢ அதன் தளிர்கள் பேராறுவரையும்** பரவின.⁾ 12⁽பின்னர், நீர் ஏன்␢ அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்?␢ அவ்வழிச் செல்வோர் அனைவரும்␢ அதன் பழத்தைப் பறிக்கின்றனரே!⁾ 13⁽காட்டுப் பன்றிகள்␢ அதனை அழிக்கின்றன;␢ வயல்வெளி உயிரினங்கள்␢ அதனை மேய்கின்றன.⁾ 14⁽படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்!␢ விண்ணுலகினின்று␢ கண்ணோக்கிப் பாரும்;␢ இந்த திராட்சைக் கொடிமீது § பரிவு காட்டும்!⁾ 15⁽உமது வலக்கை நட்டுவைத்த கிளையை,␢ உமக்கென நீர் வளர்த்த மகவைக்␢ காத்தருளும்!⁾ 16⁽அவர்கள் அதற்குத் தீ மூட்டினார்கள்;␢ அதை வெட்டித் தள்ளிவிட்டார்கள்;␢ உமது முகத்தின் சினமிகு நோக்கினால்,␢ அவர்கள் அழிந்துபோவார்களாக!⁾ 17⁽உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை␢ உமது கை காப்பதாக!␢ உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த␢ மானிட மைந்தரைக் காப்பதாக!⁾ 18⁽இனி நாங்கள் உம்மைவிட்டு␢ அகலமாட்டோம்;␢ எமக்கு வாழ்வு அளித்தருளும்;␢ நாங்கள் உமது பெயரைத் தொழுவோம்.⁾ 19⁽படைகளின் கடவுளான ஆண்டவரே!␢ எங்களை முன்னைய␢ நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்!␢ நாங்கள் விடுதலை பெறுமாறு␢ உமது முக ஒளியைக் காட்டியருளும்!⁾