திருப்பாடல்கள் 26

முந்திய அடுத்த
1⁽ஆண்டவரே, நான் குற்றமற்றவன்␢ என்பதை அறிவியும்;␢ ஏனெனில், என் நடத்தை நேர்மையானது;␢ நான் ஆண்டவரை நம்பினேன்;␢ நான் தடுமாறவில்லை.⁾ 2⁽ஆண்டவரே, என்னைச் சோதித்து␢ ஆராய்ந்து பாரும்;␢ என் மனத்தையும் உள்ளத்தையும்␢ புடமிட்டுப் பாரும்;⁾ 3⁽ஏனெனில், உமது பேரன்பு␢ என் கண்முன் இருக்கின்றது;␢ உமக்கு உண்மையாக நடந்து வருகிறேன்.⁾ 4⁽பொய்யரின் நடுவில்␢ நான் அமர்வதில்லை;␢ வஞ்சகரோடு நான் சேர்வதில்லை.⁾ 5⁽தீயோரின் மன்றத்தை␢ நான் வெறுக்கின்றேன்;␢ பொல்லாரின் நடுவில்␢ நான் அமர்வதில்லை.⁾ 6⁽மாசற்றவனாய்␢ என் கைகளைக் கழுவுகின்றேன்;␢ ஆண்டவரே, உம் பலிபீடத்தை␢ வலம் வருவேன்.⁾ 7⁽உரத்த குரலில் உமக்கு␢ நன்றிப்பா பாடுகின்றேன்;␢ வியத்தகு உம் செயல்களை எல்லாம்␢ எடுத்துரைக்கின்றேன்;⁾ 8⁽ஆண்டவரே,␢ நீர் குடிகொள்ளும் இல்லத்தை␢ நான் விரும்புகின்றேன்;␢ உமது மாட்சி தங்கியுள்ள இடத்தை␢ நான் விரும்புகின்றேன்;⁾ 9⁽பாவிகளுக்குச் செய்வதுபோல்␢ என் உயிரைப் பறித்து விடாதீர்!␢ கொலை வெறியர்களுக்குச் செய்வதுபோல்␢ என் வாழ்வை அழித்து விடாதீர்!⁾ 10⁽அவர்கள் கைகளில் தீச்செயல்கள்;␢ அவர்கள் வலக்கையில் § நிறையக் கையூட்டு.⁾ 11⁽நானோ மாசற்றவனாய்␢ நடந்து கொள்கின்றேன்;␢ என்னை மீட்டருளும்;␢ எனக்கு இரங்கியருளும்.⁾ 12⁽என் கால்கள்␢ சமமான தளத்தில் நிற்கின்றன;␢ மாபெரும் சபையில்␢ ஆண்டவரைப் புகழ்ந்திடுவேன்.⁾