திருப்பாடல்கள் 78

முந்திய அடுத்த
1⁽என் மக்களே,␢ என் அறிவுரைக்குச்␢ செவிசாயுங்கள்;␢ என் வாய்மொழிகளுக்குச்␢ செவிகொடுங்கள்.⁾ 2⁽நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்;␢ முற்காலத்து மறைசெய்திகளை␢ எடுத்துரைப்பேன்.⁾ 3⁽நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை,␢ எம் மூதாதையர் எமக்கு␢ விரித்துரைத்தவை –␢ இவற்றை உரைப்போம்.⁾ 4⁽அவர்களின் பிள்ளைகளுக்கு␢ நாங்கள் அவற்றை மறைக்க மாட்டோம்;␢ வரவிருக்கும் தலைமுறைக்கு␢ ஆண்டவரின் புகழ்மிகு,␢ வலிமைமிகு செயல்களையும்␢ அவர் ஆற்றிய வியத்தகு␢ செயல்களையும் எடுத்துரைப்போம்.⁾ 5⁽யாக்கோபுக்கென அவர்␢ நியமங்களை வகுத்தார்;␢ இஸ்ரயேலுக்கெனத்␢ திருச்சட்டத்தை ஏற்படுத்தினார்;␢ இதனையே தம் பிள்ளைகளுக்கும்␢ கற்பிக்குமாறு␢ நம் மூதாதையர்க்கு அவர்␢ கட்டளையிட்டார்.⁾ 6⁽வரவிருக்கும் தலைமுறையினர்␢ இவற்றை அறிந்திடவும்,␢ இனிப் பிறக்கவிருக்கும் பிள்ளைகள் –␢ இவர்கள் தம் புதல்வர்களுக்கு␢ ஆர்வத்துடன் கற்றுக்கொடுக்கவும்,⁾ 7⁽அதனால், அவர்கள் கடவுள்மீது␢ நம்பிக்கை வைக்கவும்,␢ இறைவனின் செயல்களை மறவாதிருக்கவும்,␢ அவர்தம் கட்டளைகளைக் § கடைப்பிடிக்கவும்,⁾ 8⁽தங்கள் மூதாதையரைப்போல்,␢ எதிர்ப்பு மனமும்,␢ அடங்காக் குணமும் கொண்ட␢ தலைமுறையாகவும்,␢ நேரிய உள்ளமற்றவர்களாகவும்␢ இறைவன்மீது உண்மைப் பற்று § அற்றவர்களாகவும்␢ இராதபடி அவர் கட்டளையிட்டார்.⁾ 9⁽வில் வீரரான எப்ராயிம் மக்கள்,␢ போரில் புறங்காட்டி ஓடினர்.⁾ 10⁽அவர்கள் கடவுளோடு செய்துகொண்ட␢ உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கவில்லை;␢ அவரது திருச்சட்டத்தைப் பின்பற்ற␢ மறுத்துவிட்டனர்.⁾ 11⁽அவர்தம் செயல்களையும்␢ அவர் ஆற்றிய அருஞ்செயல்களையும்␢ அவர்கள் மறந்தனர்.⁾ 12⁽எகிப்து நாட்டில், சோவான் சமவெளியில்␢ அவர்களின் மூதாதையர் காணுமாறு␢ அவர் வியத்தகு செயல்கள் பல புரிந்தார்;⁾ 13⁽கடலைப் பிரித்து␢ அவர்களை வழிநடத்தினார்;␢ தண்ணீரை அணைக்கட்டுப்போல␢ நிற்கும்படி செய்தார்;⁾ 14⁽பகலில் மேகத்தினாலும்␢ இரவு முழுவதும்␢ நெருப்பின் ஒளியாலும்␢ அவர்களை வழி நடத்தினார்.⁾ 15⁽பாலைநிலத்தில் பாறைகளைப் பிளந்தார்;␢ ஆழத்தினின்று பொங்கிவருவது␢ போன்ற நீரை␢ அவர்கள் நிறைவாகப் பருகச் செய்தார்;⁾ 16⁽பாறையினின்று நீரோடைகள்␢ வெளிப்படச் செய்தார்;␢ ஆறுகளென நீரை அவர்␢ பாய்ந்தோடச் செய்தார்.⁾ 17⁽ஆயினும், அவர்கள் அவருக்கெதிராகத்␢ தொடர்ந்து பாவம் செய்தனர்;␢ வறண்ட நிலத்தில்␢ உன்னதருக்கு எதிராய் எழுந்தனர்.⁾ 18⁽தம் விருப்பம்போல் உணவு கேட்டு␢ வேண்டுமென்றே இறைவனைச்␢ சோதித்தனர்.⁾ 19⁽அவர்கள் கடவுளுக்கு எதிராக␢ இவ்வாறு பேசினார்கள்:␢ ‘பாலை நிலத்தில் விருந்தளிக்க␢ இறைவனால் இயலுமா?⁾ 20⁽உண்மைதான்! அவர் பாறையை␢ அதிரத் தட்டினார்;␢ நீர் பாய்ந்து வந்தது;␢ ஆறுகள் கரைபுரண்டு ஓடின.␢ ஆயினும், அப்பமளிக்க இயலுமா அவரால்?␢ தம் மக்களுக்கு இறைச்சி தர முடியுமா?’⁾ 21⁽எனவே, இதைக் கேட்ட ஆண்டவர்␢ சினங்கொண்டார்;␢ நெருப்பு யாக்கோபுக்கு எதிராய்க்␢ கிளர்ந்தெழுந்தது.␢ இஸ்ரயேல்மீது அவரது சினம்␢ பொங்கியெழுந்தது.⁾ 22⁽ஏனெனில், அவர்கள் கடவுள்மீது␢ பற்றுறுதி கொள்ளவில்லை;␢ அவர் காப்பார் என்று நம்பவில்லை.⁾ 23⁽ஆயினும், மேலேயுள்ள வானங்களுக்கு␢ அவர் கட்டளையிட்டார்;␢ விண்ணகத்தின் கதவுகளைத்␢ திறந்துவிட்டார்.⁾ 24⁽அவர்கள் உண்பதற்காக மன்னாவை␢ மழையெனப் பொழியச் செய்தார்;␢ அவர்களுக்கு வானத்து உணவை␢ வழங்கினார்.⁾ 25⁽வான தூதரின் உணவை␢ மானிடர் உண்டனர்;␢ அவர்களுக்கு வேண்டியமட்டும்␢ உணவுப் பொருளை அவர் அனுப்பினார்.⁾ 26⁽அவர் விண்ணுலகினின்று கீழ்க்காற்றை␢ இறங்கிவரச் செய்தார்;␢ தம் ஆற்றலினால் தென்காற்றை␢ அழைத்துவந்தார்.⁾ 27⁽அவர் இறைச்சியைத் துகள்துகளென␢ அவர்கள்மீது பொழிந்தார்;␢ இறகுதிகழ் பறவைகளைக்␢ கடற்கரை மணலென வரவழைத்தார்.⁾ 28⁽அவற்றை அவர்தம்␢ பாளையத்தின் நடுவிலும்␢ கூடாரத்தைச் சுற்றிலும் விழச்செய்தார்.⁾ 29⁽அவர்கள் உண்டனர்;␢ முற்றிலுமாய் நிறைவடைந்தனர்;␢ அவர்கள் விரும்பியவற்றையே␢ அவர் அவர்களுக்கு அளித்தார்.⁾ 30⁽அவர்களது பெருந்தீனி வேட்கை␢ தணியுமுன்பே,␢ அவர்கள் வாயிலில்␢ உணவு இருக்கும் பொழுதே,⁾ 31⁽கடவுளின் சினம் அவர்களுக்கு எதிராக␢ மூண்டெழுந்தது;␢ அவர்களுள் வலியோரை அவர் கொன்றார்;␢ இஸ்ரயேலின் இளைஞரை வீழ்த்தினார்.⁾ 32⁽இவையெல்லாம் நிகழ்ந்த பின்னும்,␢ அவர்கள் தொடர்ந்து பாவம் செய்தார்கள்;␢ அவர்தம் வியத்தகு செயல்களில்␢ நம்பிக்கை கொள்ளவில்லை.⁾ 33⁽ஆகையால், அவர்களது வாழ்நாளை␢ மூச்சென மறையச் செய்தார்;␢ அவர்களது ஆயுளைத் திடீர்த் திகிலால்␢ முடிவுறச் செய்தார்.⁾ 34⁽அவர்களை அவர் கொன்றபோது␢ அவரைத் தேடினர்;␢ மனம் மாறி இறைவனைக்␢ கருத்தாய் நாடினர்.⁾ 35⁽கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும்␢ உன்னதரான இறைவன்␢ தங்கள் மீட்பர் என்பதையும்␢ அவர்கள் நினைவில் கொண்டனர்.⁾ 36⁽ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே␢ அவரைப் புகழ்ந்தார்கள்;␢ தங்கள் நாவினால் அவரிடம்␢ பொய் சொன்னார்கள்.⁾ 37⁽அவர்கள் இதயம்␢ அவரைப் பற்றிக்கொள்வதில்␢ உறுதியாய் இல்லை;␢ அவரது உடன்படிக்கையில்␢ அவர்கள் நிலைத்து நிற்கவில்லை.⁾ 38⁽அவரோ இரக்கம் கொண்டவராய்,␢ அவர்கள் குற்றத்தை மன்னித்தார்;␢ அவர்களை அழித்துவிடவில்லை,␢ பலமுறை தம் கோபத்தை␢ அடக்கிக்கொண்டார்.␢ தம் சினத்தையெல்லாம்␢ அவர்களுக்கு எதிராய் மூட்டவில்லை.⁾ 39⁽அவர்கள் வெறும் சதையே என்பதையும்␢ திரும்பி வராத காற்று என்பதையும்␢ அவர் நினைவுகூர்ந்தார்.⁾ 40⁽பாலை நிலத்தில்␢ அவர்கள் எத்தனையோமுறை␢ அவருக்கெதிராய்க் கிளர்ந்தெழுந்தனர்!␢ வறண்ட நிலத்தில்␢ அவர் மனத்தை வருத்தினர்!⁾ 41⁽இறைவனை அவர்கள்␢ மீண்டும் மீண்டும் சோதித்தனர்;␢ இஸ்ரயேலின் தூயவருக்கு␢ எரிச்சலூட்டினர்.⁾ 42⁽அவரது கைவன்மையை மறந்தனர்;␢ எதிரியிடமிருந்து அவர் அவர்களை␢ விடுவித்த நாளையும் மறந்தனர்;⁾ 43⁽அந்நாளில் எகிப்தில் அவர்␢ அருஞ்செயல்கள் செய்தார்;␢ சோவான் சமவெளியில்␢ வியத்தகு செயல்கள் புரிந்தார்.⁾ 44⁽அவர்களின் ஆறுகளைக்␢ குருதியாக மாற்றினார்;␢ எனவே, தங்கள் ஓடைகளினின்று␢ அவர்களால் நீர் பருக இயலவில்லை.⁾ 45⁽அவர்களை விழுங்குமாறு␢ அவர்கள்மீது ஈக்களையும்,␢ அவர்களது நாட்டை அழிக்குமாறு␢ தவளைகளையும் அவர் அனுப்பினார்.⁾ 46⁽அவர்களது விளைச்சலைப்␢ பச்சைப் புழுக்களுக்கும்␢ அவர்களது உழைப்பின் பயனை␢ வெட்டுக்கிளிகளுக்கும் அவர் கொடுத்தார்.⁾ 47⁽கல்மழையினால் அவர்களுடைய␢ திராட்சைக் கொடிகளையும்␢ உறைபனியால் அவர்களுடைய␢ அத்தி மரங்களையும் அவர் அழித்தார்.⁾ 48⁽அவர்களுடைய கால்நடைகளைக்␢ கல்மழையிடமும்␢ அவர்களுடைய ஆடுமாடுகளை␢ இடி மின்னலிடமும் அவர் ஒப்புவித்தார்.⁾ 49⁽தம் சினத்தையும், சீற்றத்தையும்␢ வெஞ்சினத்தையும் இன்னலையும் –␢ அழிவு கொணரும் தூதர்க் கூட்டத்தை –␢ அவர் ஏவினார்.⁾ 50⁽அவர் தமது சினத்திற்கு␢ வழியைத் திறந்துவிட்டார்;␢ அவர்களைச் சாவினின்று␢ தப்புவிக்கவில்லை;␢ அவர்களின் உயிரைக்␢ கொள்ளை நோய்க்கு ஒப்புவித்தார்.⁾ 51⁽எகிப்தின் அனைத்துத்␢ தலைப்பேறுகளையும்␢ ‛காம்’ கூடாரங்களில்␢ ஆண் தலைப்பேறுகளையும்␢ அவர் சாகடித்தார்.⁾ 52⁽அவர்தம் மக்களை ஆடுகளென␢ வெளிக்கொணர்ந்தார்;␢ பாலைநிலத்தில் அவர்களுக்கு␢ மந்தையென வழி காட்டினார்.⁾ 53⁽பாதுகாப்புடன் அவர்களை␢ அவர் அழைத்துச் சென்றார்;␢ அவர்கள் அஞ்சவில்லை;␢ அவர்களுடைய எதிரிகளைக்␢ கடல் மூடிக்கொண்டது.⁾ 54⁽அவர் தமது திருநாட்டுக்கு,␢ தமது வலக்கரத்தால் வென்ற மலைக்கு,␢ அவர்களை அழைத்துச் சென்றார்.⁾ 55⁽அவர்கள் முன்னிலையில்␢ வேற்றினத்தாரை அவர் விரட்டியடித்தார்;␢ அவர்களுக்கு நாட்டைப் பங்கிட்டு␢ உரிமைச் சொத்தாகக் கொடுத்தார்;␢ இஸ்ரயேல் குலங்களை␢ அவர்கள் கூடாரங்களில் குடியேற்றினார்.⁾ 56⁽ஆயினும், உன்னதரான கடவுளை␢ அவர்கள் சோதித்தனர்;␢ அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்;␢ அவர்தம் நியமங்களைக்␢ கடைப்பிடிக்கவில்லை.⁾ 57⁽தங்கள் மூதாதையர்போல்␢ அவர்கள் வழி தவறினர்;␢ நம்பிக்கைத் துரோகம் செய்தனர்;␢ கோணிய வில்லெனக் குறி மாறினர்.⁾ 58⁽தம் தொழுகை மேடுகளால்␢ அவருக்குச் சினமூட்டினர்;␢ தம் வார்ப்புச் சிலைகளால்␢ அவருக்கு ஆத்திரமூட்டினர்.⁾ 59⁽கடவுள் இதைக் கண்டு␢ சினம் கொண்டார்;␢ இஸ்ரயேலை அவர்␢ முழுமையாகப் புறக்கணித்தார்;⁾ 60⁽சீலோவில் அழைந்த தம்␢ உறைவிடத்தினின்று வெளியேறினார்;␢ மானிடர் நடுவில் தாம் வாழ்ந்த␢ கூடாரத்தினின்று அகன்றார்;⁾ 61⁽தம் வலிமையை*␢ அடிமைத் தனத்திற்குக் கையளித்தார்;␢ தம் மாட்சியை*␢ எதிரியிடம் ஒப்புவித்தார்;⁾ 62⁽தம் மக்களை வாளுக்குக் கையளித்தார்;␢ தம் உரிமைச்சொத்தின்மீது␢ கடுஞ்சினங்கொண்டார்.⁾ 63⁽அவர்களுடைய இளைஞரை␢ நெருப்பு விழுங்கியது;␢ அவர்களுடைய கன்னியர்க்குத்␢ திருமணப் பாடல் இல்லாது போயிற்று.⁾ 64⁽அவர்களுடைய குருக்கள்␢ வாளால் வீழ்த்தப்பட்டனர்;␢ அவர்களுடைய கைம்பெண்டிர்க்கு␢ ஒப்பாரி வைக்க வழியில்லை.⁾ 65⁽அப்பொழுது,␢ உறக்கத்தினின்று எழுவோரைப்போல்,␢ திராட்சை மதுவால் களிப்புறும்␢ வீரரைப்போல்␢ எம் தலைவர் விழித்தெழுந்தார்.⁾ 66⁽அவர் தம் எதிரிகளைப்␢ புறமுதுகிடச் செய்தார்;␢ அவர்களை என்றென்றும்␢ இகழ்ச்சிக்கு உள்ளாக்கினார்.⁾ 67⁽அவர் யோசேப்பின் கூடாரத்தைப்␢ புறக்கணித்தார்;␢ எப்ராயிம் குலத்தைத்␢ தேர்வு செய்யவில்லை.⁾ 68⁽ஆனால், யூதாவின் குலத்தை,␢ தமக்கு விருப்பமான சீயோன் மலையை␢ அவர் தேர்ந்துகொண்டார்.⁾ 69⁽தம் திருத்தலத்தை உயர் விண்ணகம்போல்␢ அவர் அமைத்தார்;␢ மண்ணுலகத்தில்* என்றும்␢ நிலைத்திருக்குமாறு எழுப்பினார்.⁾ 70⁽அவர் தாவீதைத்␢ தம் ஊழியராய்த் தேர்ந்தெடுத்தார்;␢ ஆட்டு மந்தைகளினின்று␢ அவரைப் பிரித்தெடுத்தார்.⁾ 71⁽இறைவன் தம் மக்களான யாக்கோபை,␢ தம் உரிமைச் சொத்தான இஸ்ரயேலை,␢ பால் கொடுக்கும் ஆடுகளைப் பேணிய␢ தாவீது மேய்க்குமாறு செய்தார்.⁾ 72⁽அவரும் நேரிய உள்ளத்தோடு␢ அவர்களைப் பேணினார்;␢ கைவன்மையாலும் அறிவுத் திறனாலும்␢ அவர்களை வழிநடத்தினார்.⁾