திருப்பாடல்கள் 74

முந்திய அடுத்த
1⁽கடவுளே! நீர் ஏன் எங்களை␢ முற்றிலுமாக ஒதுக்கிவிட்டீர்?␢ உமது மேய்ச்சல் நில ஆடுகள்மேல்␢ உமது சினம் ஏன் புகைந்தெழுகின்றது?⁾ 2⁽பண்டைக் காலத்திலேயே␢ நீர் உமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட␢ சபைக் கூட்டத்தை நினைத்தருளும்;␢ நீர் மீட்டு உமக்கு உரிமையாக்கிக் கொண்ட␢ இனத்தாரை மறந்துவிடாதேயும்;␢ நீர் கோவில் கொண்டிருந்த␢ சீயோன் மலையையும்␢ நினைவுகூர்ந்தருளும்.⁾ 3⁽நெடுநாள்களாகப் பாழடைந்து கிடக்கும்␢ பகுதிகளுக்குச் சென்று␢ பார்வையிடுவீராக!␢ எதிரிகள் உமது தூயகத்தில்␢ அனைத்தையும் பாழ்படுத்திவிட்டார்கள்.⁾ 4⁽உம்முடைய எதிரிகள் உம் திருத்தலத்தில்␢ வெற்றி முழக்கம் செய்கின்றார்கள்;␢ தங்கள் கொடிகளை வெற்றிக்கு␢ அடையாளமாக நாட்டுகின்றார்கள்.⁾ 5⁽அவர்கள் மேற்கு வாயிலில் அமைக்கப்பட்ட␢ மரப்பின்னல் வேலைப்பாடுகளைக்␢ கோடரிகளால் சிதைத்தார்கள்.⁾ 6⁽மேலும் அங்கிருந்த␢ மர வேலைப்பாடுகள் அனைத்தையும்␢ சிற்றுளியும் சுத்தியலும் கொண்டு␢ தகர்த்தெறிந்தார்கள்;⁾ 7⁽அவர்கள் உமது தூயகத்திற்குத்␢ தீ வைத்தார்கள்; தரைமட்டமாக்கினார்கள்.␢ அவர்கள் உமது பெயருக்குரிய␢ உறைவிடத்தைத்␢ தீட்டுப்படுத்தினார்கள்.⁾ 8⁽“அவர்களை அடியோடு␢ அழித்து விடுவோம்” என்று␢ தங்கள் உள்ளங்களில்␢ சொல்லிக் கொண்டார்கள்;␢ கடவுளின் சபையார் கூடும்␢ இடங்களையெல்லாம்␢ நாடெங்கும் எரித்தழித்தார்கள்.⁾ 9⁽எங்களுக்கு நீர் செய்து வந்த␢ அருஞ்செயல்களை␢ இப்போது நாங்கள் காண்பதில்லை;␢ இறைவாக்கினரும் இல்லை;␢ எவ்வளவு காலம்␢ இந்நிலை நீடிக்குமென்று␢ அறியக் கூடியவரும்␢ எங்களிடையே இல்லை.⁾ 10⁽கடவுளே! எவ்வளவு காலம்␢ பகைவர் இகழ்ந்துரைப்பர்?␢ எதிரிகள் உமது பெயரை எப்போதுமா␢ பழித்துக் கொண்டிருப்பார்கள்?⁾ 11⁽உமது கையை␢ ஏன் மடக்கிக் கொள்கின்றீர்?␢ உமது வலக்கையை␢ ஏன் உமது மடியில் வைத்துள்ளீர்?␢ அதை நீட்டி அவர்களை அழித்துவிடும்.⁾ 12⁽கடவுளே! முற்காலத்திலிருந்தே␢ நீர் எங்கள் அரசர்;␢ நீரே உலகெங்கும் மீட்புச் செயலைச்␢ செய்து வருகின்றீர்.⁾ 13⁽நீர் உமது வல்லமையால்␢ கடலைப் பிளந்தீர்;␢ நீரில் வாழும் கொடும் பாம்புகளின்␢ தலைகளை நசுக்கிவிட்டீர்.⁾ 14⁽லிவியத்தானின் தலைகளை␢ நசுக்கியவர் நீரே;␢ அதைக் காட்டு விலங்குகளுக்கு␢ இரையாகக் கொடுத்தவர் நீரே;⁾ 15⁽ஊற்றுகளையும் ஓடைகளையும்␢ பாய்ந்து வரச்செய்தவர் நீரே;␢ என்றுமே வற்றாத ஆறுகளைக்␢ காய்ந்துபோகச் செய்தவரும் நீரே.⁾ 16⁽பகலும் உமதே; இரவும் உமதே;␢ கதிரவனையும் நிலவையும்␢ தோற்றுவித்தவர் நீரே.⁾ 17⁽பூவுலகின் எல்லைகளையெல்லாம்␢ வரையறை செய்தீர்;␢ கோடைக் காலத்தையும்␢ மாரிக் காலத்தையும் ஏற்படுத்தினீர்.⁾ 18⁽ஆண்டவரே, எதிரி உம்மை இகழ்வதையும்␢ மதிகெட்ட மக்கள்␢ உமது பெயரைப் பழிப்பதையும்␢ நினைத்துப்பாரும்!⁾ 19⁽உமக்குச் சொந்தமான புறாவின் உயிரைப்␢ பொல்லாத விலங்கிடம்␢ ஒப்புவித்து விடாதேயும்!␢ சிறுமைப்படுகிற உம் மக்களின் உயிரை␢ ஒரேயடியாக மறந்து விடாதேயும்!⁾ 20⁽உமது உடன்படிக்கையை நினைத்தருளும்!␢ நாட்டின் இருளான இடங்களில்␢ கொடுமை நடக்கும் குடியிருப்புகள்␢ நிறைந்திருக்கின்றன.⁾ 21⁽சிறுமையுற்றோர் மீண்டும்␢ வெட்கமுறாதபடி செய்யும்;␢ எளியோரும் வறியோரும்␢ உமது பெயரைப் புகழ்வராக!⁾ 22⁽கடவுளே! எழுந்துவாரும்;␢ உமக்காக நீரே வழக்காடும்;␢ மதிகேடரால் நாடோறும் உமக்கு வரும்␢ இகழ்ச்சியை நினைத்துப்பாரும்.⁾ 23⁽உம்முடைய பகைவர் செய்யும்␢ முழக்கத்தை மறவாதேயும்;␢ உம் எதிரிகள் இடைவிடாது எழுப்பும்␢ அமளியைக் கேளும்.⁾