திருப்பாடல்கள் 11

முந்திய அடுத்த
1⁽நான் ஆண்டவரிடம் அடைக்கலம்␢ புகுந்துள்ளேன்;␢ நீங்கள் என்னிடம், ‛பறவையைப் போல␢ மலைக்குப் பறந்தோடிப் போ;⁾ 2⁽ஏனெனில், இதோ பார்!␢ பொல்லார் வில்லை வளைக்கின்றனர்;␢ நாணில் அம்பு தொடுக்கின்றனர்;␢ நேரிய உள்ளத்தார்மீது␢ இருளில் அம்பு எய்யப் பார்க்கின்றனர்;⁾ 3⁽அடித்தளங்களே தகர்க்கப்படும்பொழுது,␢ நேர்மையாளரால் என்ன செய்ய முடியும்?’␢ என்று சொல்வது எப்படி?⁾ 4⁽ஆண்டவர் தம் தூய கோவிலில்␢ இருக்கின்றார்; அவரது அரியணை␢ விண்ணுலகில் இருக்கின்றது;␢ அவர் கண்கள் உற்று நோக்குகின்றன;␢ அவர் விழிகள்␢ மானிடரைச் சோதித்தறிகின்றன.⁾ 5⁽ஆண்டவர் நேர்மையாளரையும்␢ பொல்லாரையும் சோதித்தறிகின்றார்;␢ வன்முறையில் நாட்டங்கொள்வோரை␢ அவர் வெறுக்கின்றார்.⁾ 6⁽அவர் பொல்லார்மீது கரிநெருப்பும்␢ கந்தகமும் சொரியும்படி செய்கின்றார்;␢ பொசுக்கும் தீக்காற்றே␢ அவர்கள் குடிக்கும் பானமாகும்.⁾ 7⁽ஏனெனில், நீதியுள்ள ஆண்டவர்␢ நேரிய செயல்களை விரும்புகின்றார்;␢ அவர்தம் திருமுகத்தை␢ நேர்மையாளர் காண்பர்.⁾