திருப்பாடல்கள் 67

முந்திய அடுத்த
1⁽கடவுளே! எம்மீது இரங்கி,␢ எமக்கு ஆசி வழங்குவீராக!␢ உம் திருமுக ஒளியை␢ எம்மீது வீசுவீராக! (சேலா)⁾ 2⁽அப்பொழுது, உலகம்␢ உமது வழியை அறிந்துகொள்ளும்;␢ பிற இனத்தார் அனைவரும்␢ நீர் அருளும் மீட்பை␢ உணர்ந்து கொள்வர். (சேலா)⁾ 3⁽கடவுளே! மக்களினத்தார்␢ உம்மைப் புகழ்வார்களாக!␢ மக்கள் எல்லாரும்␢ உம்மைப் போற்றுவார்களாக!⁾ 4⁽வேற்று நாட்டினர் அக்களித்து␢ மகிழ்ச்சியுடன் பாடிடுவராக!␢ ஏனெனில், நீர் மக்களினங்களை␢ நேர்மையுடன் ஆளுகின்றீர்;␢ உலகின் நாடுகளை␢ வழிநடத்துகின்றீர். (சேலா)⁾ 5⁽கடவுளே! மக்களினத்தார்␢ உம்மைப் புகழ்வார்களாக!␢ மக்கள் எல்லாரும்␢ உம்மைப் போற்றுவார்களாக!⁾ 6⁽நானிலம் தன் பலனை ஈந்தது;␢ கடவுள், நம் கடவுள்␢ நமக்கு ஆசி வழங்கினார்.⁾ 7⁽கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக!␢ உலகின் கடையெல்லைவரை வாழ்வோர்␢ அவருக்கு அஞ்சுவராக!⁾