திருப்பாடல்கள் 6

முந்திய அடுத்த
1⁽ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு␢ என்னைக் கண்டியாதேயும்;␢ என் மீது கடுஞ்சீற்றங்கொண்டு␢ என்னைத் தண்டியாதேயும்.⁾ 2⁽ஆண்டவரே, எனக்கு இரங்கும்;␢ ஏனெனில், நான் தளர்ந்து போனேன்;␢ ஆண்டவரே, என்னைக் குணமாக்கியருளும்;␢ ஏனெனில், என் எலும்புகள் § வலுவிழந்து போயின.⁾ 3⁽என் உயிர் ஊசலாடுகின்றது;␢ ஆண்டவரே, இந்நிலை எத்தனை நாள்?⁾ 4⁽ஆண்டவரே, திரும்பும்;␢ என் உயிரைக் காப்பாற்றும்.␢ உமது பேரன்பை முன்னிட்டு␢ என்னை மீட்டருளும்.⁾ 5⁽இறந்தபின் உம்மை நினைப்பவர்␢ எவருமில்லை; பாதாளத்தில்␢ உம்மைப் போற்றுபவர் யார்?⁾ 6⁽பெருமூச்சினால் இளைத்துப் போனேன்;␢ ஒவ்வோர் இரவும் கண்ணீரில்␢ என் படுக்கை மிதக்கின்றது.␢ என் கட்டில் அழுகையால் நனைகின்றது.⁾ 7⁽துயரத்தால் என் கண் வீங்கிப்போயிற்று;␢ என் பகைவர் அனைவரின் காரணமாக␢ அது மங்கிப்போயிற்று.⁾ 8⁽தீங்கிழைப்போரே! நீங்கள் அனைவரும்␢ என்னை விட்டு அகன்றுபோங்கள்;␢ ஏனெனில், ஆண்டவர் என்␢ அழுகுரலுக்குச் செவிசாய்த்து விட்டார்.⁾ 9⁽ஆண்டவர் என் விண்ணப்பத்தைக்␢ கேட்டருளினார்; அவர் என்␢ வேண்டுதலை ஏற்றுக்கொண்டார்.⁾ 10⁽என் எதிரிகள் யாவரும்␢ வெட்கிப் பெரிதும் கலங்கட்டும்;␢ அவர்கள் திடீரென␢ நாணமுற்றுத் திரும்பிச் செல்லட்டும்.⁾