1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
1⁽உண்மையாகவே, இஸ்ரயேலர்க்குக்␢ கடவுள் எவ்வளவு நல்லவர்!␢ தூய உள்ளத்தினர்க்கு␢ ஆண்டவர் எவ்வளவோ நல்லவர்!⁾
2⁽என் கால்கள்␢ சற்றே நிலைதடுமாறலாயின;␢ நான் அடிசறுக்கி விழப்போனேன்.⁾
3⁽ஆணவம் கொண்டோர்மேல்␢ நான் பொறாமை கொண்டேன்;␢ பொல்லாரின் வளமிகு வாழ்வை␢ நான் கண்டேன்.⁾
4⁽அவர்களுக்குச்␢ சாவின் வேதனை என்பதே இல்லை;␢ அவர்களது உடல்,␢ நலமும் உரமும் கொண்டது.⁾
5⁽மனிதப் பிறவிகளுக்குள்ள வருத்தம்␢ அவர்களுக்கு இல்லை.␢ மற்ற மனிதர்களைப் போல்␢ அவர்கள் துன்புறுவதில்லை.⁾
6⁽எனவே, மணிமாலைபோல்␢ செருக்கு அவர்களை அணி செய்கிறது;␢ வன்செயல் அவர்களை␢ ஆடைபோல மூடிக்கொள்கிறது.⁾
7⁽அவர்களின் கண்கள்␢ கொழுப்பு மிகுதியால்␢ புடைத்திருக்கின்றன;␢ அவர்களது மனத்தின் கற்பனைகள்␢ எல்லை கடந்து செல்கின்றன.⁾
8⁽பிறரை எள்ளி நகையாடி␢ வஞ்சகமாய்ப் பேசுகின்றனர்;␢ இறுமாப்புக்கொண்டு␢ கொடுமை செய்யத் திட்டமிடுகின்றனர்.⁾
9⁽விண்ணுலகை எதிர்த்து␢ அவர்கள் வாய் பேசுகின்றது;␢ மண்ணுலகமெங்கும் அவர்கள் சொல்␢ விரிந்து பரவுகின்றது.⁾
10⁽ஆதலால், கடவுளின் மக்களும்␢ அவர்களைப் புகழ்ந்து பின்பற்றுகின்றனர்;␢ இவ்வாறு, கடல் முழுவதையும்␢ உறிஞ்சிக் குடித்துவிட்டார்கள்.⁾
11⁽‘இறைவனுக்கு எப்படித் தெரியும்?␢ உன்னதர்க்கு அறிவு இருக்கிறதா?’␢ என்கின்றார்கள்.⁾
12⁽ஆம்; பொல்லார்␢ இப்படித்தான் இருக்கின்றனர்;␢ என்றும் வளமுடன் வாழ்ந்து␢ செல்வத்தைப் பெருக்கிக்கொள்கின்றனர்.⁾
13⁽அப்படியானால், நான் என் உள்ளத்தை␢ மாசற்றதாய் வைத்துக் கொண்டது வீண்தானா?␢ குற்றமற்ற நான் என் கைகளைக்␢ கழுவிக்கொண்டதும் வீண்தானா?⁾
14⁽நாள்தோறும் நான்␢ வதைக்கப்படுகின்றேன்;␢ காலைதோறும்␢ கண்டிப்புக்கு ஆளாகின்றேன்.⁾
15⁽“நானும் அவர்களைப்போல் பேசலாமே”␢ என்று நான் நினைத்திருந்தால்,␢ உம் மக்களின் தலைமுறைக்கு␢ நம்பிக்கைத் துரோகம் செய்தவனாவேன்.⁾
16⁽ஆகவே, இதன் உண்மை என்னவென்று␢ கண்டறிய முயன்றேன்;␢ ஆனால், அது பெரிய புதிராயிருந்தது.⁾
17⁽நான் இறைவனின் தூயகத்திற்குச்␢ சென்றபின்புதான்␢ அவர்களுக்கு நேரிடப்போவது என்ன␢ என்பதை உணர்ந்துகொண்டேன்.⁾
18⁽உண்மையில் அவர்களை நீர்␢ சறுக்கலான இடங்களில் வைப்பீர்;␢ அவர்களை விழத்தாட்டி␢ அழிவுக்கு உள்ளாக்குவீர்.⁾
19⁽அவர்கள் எவ்வளவு விரைவில்␢ ஒழிந்து போகிறார்கள்!␢ அவர்கள் திகில் பிடித்தவர்களாய்␢ அடியோடு அழிந்து போகிறார்கள்!⁾
20⁽விழித்தெழுவோரின் கனவுபோல்␢ அவர்கள் ஒழிந்து போவார்கள்;␢ என் தலைவராகிய ஆண்டவரே,␢ நீர் கிளர்ந்தெழும்போது␢ அவர்கள் போலித்தனத்தை இகழ்வீர்.⁾
21⁽என் உள்ளம் கசந்தது;␢ என் உணர்ச்சிகள் என்னை␢ ஊடுருவிக் குத்தின.⁾
22⁽அப்பொழுது நான்␢ அறிவிழந்த மதிகேடனானேன்;␢ உமது முன்னிலையில்␢ ஒரு விலங்கு போல நடந்து கொண்டேன்.⁾
23⁽ஆனாலும், நான் எப்போதும்␢ உமது முன்னிலையிலேதான்␢ இருக்கின்றேன்; என் வலக்கையை␢ ஆதரவாய்ப் பிடித்துள்ளீர்.⁾
24⁽உமது திருவுளப்படியே␢ என்னை நடத்துகின்றீர்;␢ முடிவில் மாட்சியோடு␢ என்னை எடுத்துக் கொள்வீர்.⁾
25⁽விண்ணுலகில் உம்மையன்றி␢ எனக்கிருப்பவர் யார்?␢ மண்ணுலகில் வேறு விருப்பம்␢ உம்மையன்றி எனக்கேதுமில்லை.⁾
26⁽எனது உடலும் உள்ளமும்␢ நைந்து போயின;␢ கடவுளே என் உள்ளத்திற்கு அரணும்␢ என்றென்றும் எனக்குரிய பங்கும் ஆவார்.⁾
27⁽உண்மையிலேயே, உமக்குத்␢ தொலைவாய் இருப்பவர்கள் அழிவார்கள்;␢ உம்மைக் கைவிடும்␢ அனைவரையும் அழித்துவிடும்.⁾
28⁽நானோ கடவுளின் அண்மையே␢ எனக்கு நலமெனக் கொள்வேன்;␢ என் தலைவராகிய ஆண்டவரை␢ என் அடைக்கலமாய்க்கொண்டு␢ அவர்தம் செயல்களை எடுத்துரைப்பேன்.⁾