1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
1⁽நெருக்கடி வேளையில்␢ உமக்கு ஆண்டவர் பதிலளிப்பாராக!␢ யாக்கோபின் கடவுளது பெயர்␢ உம்மைப் பாதுகாப்பதாக!⁾
2⁽தூயகத்திலிருந்து அவர் உமக்கு␢ உதவி அனுப்புவாராக!␢ சீயோனிலிருந்து அவர் உமக்குத்␢ துணை செய்வாராக!⁾
3⁽உம் உணவுப் படையலை எல்லாம்␢ அவர் நினைவில் கொள்வாராக!␢ உமது எரி பலியை␢ ஏற்றுக்கொள்வாராக! (சேலா)⁾
4⁽உமது மனம் விரும்புவதை␢ அவர் உமக்குத் தந்தருள்வாராக!␢ உம் திட்டங்களை எல்லாம்␢ நிறைவேற்றுவாராக!⁾
5⁽உமது வெற்றியைக் குறித்து␢ மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போமாக!␢ நம் கடவுளின் பெயரால்␢ வெற்றிக்கொடி நாட்டுவோமாக!␢ உம் விண்ணப்பங்களையெல்லாம்␢ ஆண்டவர் நிறைவேற்றுவாராக!⁾
6⁽ஆண்டவர் தாம் திருப்பொழிவு செய்தவருக்கு␢ வெற்றி தருகின்றார்.␢ தமது தூய வானத்திலிருந்து␢ அவருக்குப் பதிலளிக்கின்றார்.␢ வெற்றியளிக்கும் தமது வலக்கையின்␢ ஆற்றலைக் காட்டுகின்றார் என்று␢ இப்பொழுது நான் அறிந்து கொள்கின்றேன்.⁾
7⁽சிலர் தேர்ப்படையிலும்,␢ சிலர் குதிரைப்படையிலும்␢ பெருமை கொள்கின்றனர்;␢ நாமோ நம் கடவுளாகிய ஆண்டவரின்␢ பெயரில் பெருமை கொள்கின்றோம்.⁾
8⁽அவர்கள் தடுமாறி வீழ்ந்தார்கள்;␢ நாமோ நிமிர்ந்து உறுதியாய் நிற்கின்றோம்.⁾
9⁽ஆண்டவரே, அரசருக்கு வெற்றியருளும்;␢ நாங்கள் கூப்பிடும் வேளையில்␢ எங்களுக்குப் பதிலளியும்.⁾