திருப்பாடல்கள் 90

முந்திய அடுத்த
1⁽என் தலைவரே! தலைமுறைதோறும்␢ நீரே எங்கள் புகலிடமாய் உள்ளீர்.⁾ 2⁽மலைகள் தோன்றுமுன்பே,␢ நிலத்தையும் உலகையும்␢ நீர் உருவாக்குமுன்பே,␢ ஊழி ஊழிக்காலமாய் உள்ள␢ இறைவன் நீரே!⁾ 3⁽மனிதரைப் புழுதிக்குத்␢ திரும்பிடச் செய்கின்றீர்;␢ ‘மானிடரே! மீண்டும்␢ புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.⁾ 4⁽ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள்,␢ உம் பார்வையில்␢ கடந்துபோன நேற்றைய நாள் போலவும்␢ இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன.⁾ 5⁽வெள்ளமென மானிடரை␢ வாரிக்கொண்டு செல்கின்றீர்;␢ அவர்கள் வைகறையில் முளைத்தெழும்␢ புல்லுக்கு ஒப்பாவர்;⁾ 6⁽அது காலையில் தளிர்த்துப்␢ பூத்துக் குலுங்கும்;␢ மாலையில் வாடிக் காய்ந்து போகும்.⁾ 7⁽உமது சினத்தால் நாங்கள்␢ அழிந்து போகின்றோம்;␢ உமது சீற்றத்தால் நாங்கள்␢ திகைப்படைகின்றோம்.⁾ 8⁽எம் குற்றங்களை␢ உம் கண்முன் நிறுத்தினீர்;␢ மறைவான எம் பாவங்களை␢ உம் திருமுக ஒளிமுன் வைத்தீர்.⁾ 9⁽எங்கள் அனைத்து வாழ்நாள்களும்␢ உமது சினத்தால்␢ முடிவுக்கு வந்துவிட்டன;␢ எங்கள் ஆண்டுகள்␢ பெருமூச்செனக் கழிந்துவிட்டன.⁾ 10⁽எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே;␢ வலிமை மிகுந்தோர்க்கு எண்பது;␢ அவற்றில் பெருமைக்கு உரியன␢ துன்பமும் துயரமுமே!␢ அவை விரைவில் கடந்துவிடுகின்றன.␢ நாங்களும் பறந்துவிடுகின்றோம்.⁾ 11⁽உமது சினத்தின் வலிமையை␢ உணர்பவர் எவர்?␢ உமது கடுஞ்சீற்றத்துக்கு␢ அஞ்சுபவர் எவர்?⁾ 12⁽எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க␢ எங்களுக்குக் கற்பியும்;␢ அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப்␢ பெற்றிடுவோம்.⁾ 13⁽ஆண்டவரே, திரும்பி வாரும்;␢ எத்துணைக் காலம் இந்நிலை?␢ உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்.⁾ 14⁽காலைதோறும் உமது பேரன்பால்␢ எங்களுக்கு நிறைவளியும்;␢ அப்பொழுது வாழ்நாளெல்லாம்␢ நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.⁾ 15⁽எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும்␢ நாங்கள் தீங்குற்ற␢ ஆண்டுகளுக்கும் ஈடாக,␢ எம்மை மகிழச் செய்யும்.⁾ 16⁽உம் அடியார்மீது உம் செயலும்␢ அவர்தம் மைந்தர்மீது␢ உமது மாட்சியும் விளங்கச் செய்யும்.⁾ 17⁽எம் கடவுளாம் தலைவரின் இன்னருள்␢ எம்மீது தங்குவதாக!␢ நாங்கள் செய்பவற்றில்␢ எங்களுக்கு வெற்றி தாரும்!␢ ஆம், நாங்கள் செய்பவற்றில்␢ வெற்றியருளும்!⁾