1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
1⁽ஆண்டவரே, என்மீது␢ சினங்கொண்டு␢ என்னைக் கண்டியாதேயும்;␢ என்மீது சீற்றங்கொண்டு␢ என்னைத் தண்டியாதேயும்;⁾
2⁽ஏனெனில், உம் அம்புகள்␢ என்னுள் பாய்ந்திருக்கின்றன;␢ உமது கை என்னை␢ அழுத்திக் கொண்டிருக்கின்றது.⁾
3⁽நீர் கடுஞ்சினங்கொண்டதால்␢ என் உடலில் நலமே இல்லை;␢ என் பாவத்தால் என் எலும்புகளில்␢ வலுவே இல்லை.⁾
4⁽என் குற்றங்கள் தலைக்குமேல்␢ போய்விட்டன;␢ தாங்கவொண்ணாச் சுமைபோல␢ அவை என்னை வெகுவாய் § அழுத்துகின்றன.⁾
5⁽என் புண்கள் அழுகி␢ நாற்றமெடுக்கின்றன;␢ என் மதிகேடுதான்␢ இதற்கெல்லாம் காரணம்.⁾
6⁽நான் மிகவும் ஒடுங்கிப்போனேன்;␢ நாளெல்லாம் துயருற்றுத் திரிகின்றேன்.⁾
7⁽என் குடல் முற்றிலும் வெந்து போயிற்று;␢ என் உடலில் சற்றேனும் நலம் இல்லை.⁾
8⁽நான் வலுவற்றுப் போனேன்;␢ முற்றிலும் நொறுங்கிப் போனேன்;␢ என் உள்ளக் கொதிப்பினால்␢ கதறுகின்றேன்.⁾
9⁽என் தலைவரே, என் பெருமூச்செல்லாம்␢ உமக்குத் தெரியும்;␢ என் வேதனைக் குரல்␢ உமக்கு மறைவாயில்லை.⁾
10⁽என் உள்ளம் வேதனையால் துடிக்கின்றது;␢ என் வலிமை என்னைவிட்டு அகன்றது;␢ என் கண்களும்கூட ஒளி இழந்தன.⁾
11⁽என் நண்பர்களும் தோழர்களும்␢ நான் படும் வாதை கண்டு␢ விலகி நிற்கின்றனர்;␢ என் உறவினரும் என்னைவிட்டு␢ ஒதுங்கி நிற்கின்றனர்.⁾
12⁽என் உயிரைப் பறிக்கத்தேடுவோர்␢ எனக்குக் கண்ணி வைக்கின்றனர்;␢ எனக்குத் தீங்கிழைக்கத் துணிந்தோர்␢ என் அழிவைப் பற்றிப் பேசுகின்றனர்;␢ எப்போதும் எனக்கெதிராய்ச்␢ சூழ்ச்சி செய்கின்றனர்.⁾
13⁽நானோ செவிடர்போல் காது கேளாமலும்␢ ஊமைபோல் வாய் திறவாமலும் § இருக்கின்றேன்.⁾
14⁽உண்மையாகவே, நான்␢ செவிப்புலனற்ற மனிதர் போலும்␢ மறுப்புரை கூறாத␢ நாவினர் போலும் ஆனேன்;⁾
15⁽ஏனெனில் ஆண்டவரே,␢ நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்;␢ என் தலைவராகிய கடவுளே,␢ செவிசாய்த்தருளும்.⁾
16⁽‛அவர்கள் என்னைப் பார்த்துக்␢ களிக்க விடாதேயும்;␢ என் கால் தடுமாறினால் அவர்கள்␢ பெருமை கொள்வர்’ என்று சொன்னேன்.⁾
17⁽நான் தடுமாறிவிழும் நிலையில்␢ இருக்கின்றேன்;␢ நான் எப்போதும் வேதனையில் உள்ளேன்.⁾
18⁽என் குற்றத்தை நான்␢ அறிக்கையிடுகின்றேன்;␢ என் பாவத்தின் பொருட்டு␢ நான் அஞ்சுகின்றேன்.⁾
19⁽காரணமின்றி என்னைப் பகைப்போர்␢ வலுவாய் உள்ளனர்;␢ வீணாக என்னை வெறுப்போர்␢ பலராய் உள்ளனர்;⁾
20⁽நன்மைக்குப் பதிலாக அவர்கள்␢ எனக்குத் தீமை செய்கின்றனர்;␢ நன்மையே நாடும் என்னைப்␢ பகைக்கின்றனர்;⁾
21⁽ஆண்டவரே! என்னைக் கைவிடாதேயும்;␢ என் கடவுளே!␢ என்னைவிட்டு அகன்றுவிடாதேயும்.⁾
22⁽என் தலைவரே! மீட்பரே!␢ எனக்குத் துணைசெய்ய விரைந்து வாரும்.⁾