1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
1⁽அல்லேலூயா! ஆண்டவருக்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ ஏனெனில் அவர் நல்லவர்!␢ என்றென்றுமுள்ளது அவரது பேரன்பு!⁾
2⁽ஆண்டவரின் வலிமைமிகு செயல்களை␢ யாரால் இயம்ப இயலும்?␢ ஆவர்தம் புகழை␢ யாரால் விளம்பக் கூடும்?⁾
3⁽நீதிநெறி காப்போர் பேறு பெற்றோர்!␢ எப்போதும் நேரியதே செய்வோர்␢ பேறுபேற்றோர்!⁾
4⁽ஆண்டவரே! நீர் உம்மக்கள்மீது␢ இரக்கம் காட்டும்போது␢ என்னை நினைவு கூரும்!␢ அவர்களை நீர் விடுவிக்கும்போது␢ எனக்கும் துணைசெய்யும்!⁾
5⁽நீர் தேர்ந்தெடுத்த மக்களின்␢ நல்வாழ்வை நான் காணும்படி செய்யும்;␢ உம்முடைய மக்களின் மகிழ்ச்சியில்␢ நானும் பங்கு கொள்ளும்படிச் செய்யும்!␢ அப்போது, உமது உரிமைச் சொத்தான␢ மக்களோடு உம்மைப் போற்றிட இயலும்.⁾
6⁽எங்கள் மூதாதையரின் வழிநடந்து,␢ நாங்களும் பாவம் செய்தோம்;␢ குற்றம் புரிந்தோம்; தீமை செய்தோம்.⁾
7⁽எங்கள் மூதாதையர் எகிப்தில் நீர்செய்த␢ வியத்தகு செயல்களைப் பற்றிச்␢ சிந்திக்கவில்லை;␢ உமது மாபெரும் பேரன்பை␢ அவர்கள் நினைவில் கொள்ளவில்லை;␢ மாறாக உன்னதமானவரை எதிர்த்துச்␢ செங்கடல் ஓரத்தில்* கலகம் செய்தனர்.⁾
8⁽அவரோ தமது பெயரின் பொருட்டு␢ அவர்களை விடுவித்தார்;␢ இவ்வாறு அவர் தமது வலிமையை␢ வெளிப்படுத்தினார்.⁾
9⁽அவர் செங்கடலை அதட்டினார்;␢ அது உலர்ந்து போயிற்று;␢ பாலை நிலத்தில் நடத்திச் செல்வது போல்␢ அவர்களை ஆழ்கடல் வழியே␢ நடத்திச்சென்றார்.⁾
10⁽எதிரியின் கையினின்று␢ அவர்களை விடுவித்தார்;␢ பகைவரின் பிடியினின்று␢ அவர்களை மீட்டார்.⁾
11⁽அவர்களுடைய எதிரிகளைக்␢ கடல்நீர் மூழ்கடித்தது;␢ அவர்களுள் ஒருவர்கூட␢ எஞ்சியிருக்கவில்லை.⁾
12⁽அப்பொழுது, அவர்கள்␢ அவருடைய வாக்குறுதிகளில்␢ நம்பிக்கை வைத்தார்கள்;␢ அவரைப் புகழ்ந்து பாடினார்கள்.⁾
13⁽ஆயினும், அவர் செய்தவற்றை␢ அவர்கள் விரைவிலேயே␢ மறந்துவிட்டார்கள்;␢ அவரது அறிவுரைக்காக␢ அவர்கள் காத்திருக்கவில்லை.⁾
14⁽பாலைநிலத்தில் அவர்கள்␢ பெருவிருப்புக்கு இடங்கொடுத்தார்கள்.␢ பாழ்வெளியில் அவர்கள்␢ இறைவனைச் சோதித்தார்கள்.⁾
15⁽அவர்கள் கேட்டதை␢ அவர் அவர்களுக்குச் கொடுத்தார்;␢ அவர்களின் உயிரை அழிக்குமாறு␢ அவர்கள்மீது நோயை அனுப்பினார்.⁾
16⁽பாளையத்தில் இருக்கும்போது␢ மோசேயின்மீதும்,␢ ஆண்டவருக்காகத் திருநிலைபெற்ற␢ ஆரோன்மீதும்,␢ அவர்கள் பொறாமை கொண்டார்கள்.⁾
17⁽நிலம் பிளந்து தாத்தானை விழுங்கியது;␢ அபிராமின் கும்பலை␢ அப்படியே புதைத்துவிட்டது.⁾
18⁽அக்கும்பலிடையே நெருப்பு␢ கொழுந்துவிட்டு எரிந்தது;␢ தீயோரைத் தீப்பிழம்பு எரித்தது.⁾
19⁽அவர்கள் ஓரேபில் ஒரு␢ கன்றுக் குட்டியைச் செய்துகொண்டனர்;␢ வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்;⁾
20⁽தங்கள் ‘மாட்சி’க்குப் பதிலாக,␢ புல்தின்னும் காளையின்␢ உருவத்தைச் செய்து கொண்டனர்;⁾
21⁽தங்களை விடுவித்த␢ இறைவனை மறந்தனர்;␢ எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்;⁾
22⁽காம் நாட்டில் அவர் செய்த␢ வியத்தகு செயல்களை மறந்தனர்;␢ செங்கடலில் அவர் செய்த␢ அச்சுறுத்தும் செயல்களையும்␢ மறந்தனர்.⁾
23⁽ஆகையால், அவர்களை அவர்␢ அழித்துவிடுவதாகக் கூறினார்;␢ ஆனால், அவரால் தேர்ந்து கொள்ளப்பட்ட␢ மோசே, அவர்முன்␢ உடைமதில் காவலர் போல் நின்று␢ அவரது கடுஞ்சினம் அவர்களை␢ அழிக்காதவாறு தடுத்தார்.⁾
24⁽அருமையான நாட்டை␢ அவர்கள் இகழ்ந்தார்கள்;␢ அவரது வாக்குறுதியில்␢ நம்பிக்கை கொள்ளவில்லை.⁾
25⁽அவர்கள் தங்களின் கூடாரங்களில்␢ முறுமுறுத்தார்கள்;␢ ஆண்டவரின் குரலுக்குச்␢ செவிகொடுக்கவில்லை.⁾
26⁽ஆகவே அவர் அவர்களுக்கு எதிராகத்␢ தம் கையை ஓங்கி␢ ‘நான் உங்களைப் பாலைநிலத்தில்␢ வீழ்ச்சியுறச் செய்வேன்;⁾
27⁽உங்கள் வழிமரபினரை␢ வேற்றினங்களிடையிலும்␢ அன்னிய நாடுகளிலும்␢ சிதறடிப்பேன்’ என்றார்.⁾
28⁽பின்னர் அவர்கள் பாகால்பெயோரைப்␢ பற்றிக் கொண்டார்கள்.␢ உயிரற்ற தெய்வங்களுக்குப்␢ பலியிட்டவற்றை உண்டார்கள்;⁾
29⁽இவ்வாறு தங்கள் செய்கைகளினால்␢ அவருக்குச் சினமூட்டினார்கள்;␢ ஆகவே, கொள்ளைநோய்␢ அவர்களிடையே பரவிற்று.⁾
30⁽பினகாசு கொதித்தெழுந்து␢ தலையிட்டதால்␢ கொள்ளைநோய் நீங்கிற்று.⁾
31⁽இதனால், தலைமுறை தலைமுறையாக␢ என்றென்றும், அவரது செயல்␢ நீதியாகக் கருதப்பட்டது.⁾
32⁽மெரிபாவின் ஊற்றினருகில்␢ அவருக்குச் சினமூட்டினார்கள்.␢ அவர்களின் பொருட்டு␢ மோசேக்கும் தீங்கு நேரிட்டது.⁾
33⁽மோசேக்கு அவர்கள்␢ மனக்கசப்பை ஏற்படுத்தியதால்␢ அவர் முன்பின் பாராது பேசினார்.⁾
34⁽ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக,␢ மக்களினங்களை அவர்கள்␢ அழிக்கவில்லை.⁾
35⁽வேற்றினத்தாரோடு கலந்துறவாடி,␢ அவர்களின் வழக்கங்களைக்␢ கற்றுக்கொண்டனர்;⁾
36⁽அவர்களின் தெய்வச் சிலைகளைத்␢ தொழுதனர்; அவையே␢ அவர்களுக்குக் கண்ணிகளாயின.⁾
37⁽அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப்␢ பேய்களுக்குப் பலியிட்டனர்;⁾
38⁽மாசற்ற இரத்தத்தை,␢ தங்கள் புதல்வர் புதல்வியரின்␢ இரத்தத்தைச் சிந்தினர்;␢ கானான் நாட்டுத்␢ தெய்வங்களின் சிலைகளுக்கு␢ அவர்களைப் பலியிட்டார்கள்;␢ அவர்களின் இரத்தத்தால்␢ நாடு தீட்டுப்பட்டது.⁾
39⁽அவர்கள் தங்கள் செயல்களால் தங்களைக்␢ கறைப்படுத்திக் கொண்டனர்;␢ தங்கள் செயல்கள் மூலம்␢ வேசித்தனம் செய்தனர்.⁾
40⁽எனவே, ஆண்டவரின் சினம்␢ அவர்தம் மக்களுக்கெதிராகப்␢ பற்றியெரிந்தது;␢ தமது உரிமைச் சொத்தை␢ அவர் அருவருத்தார்.⁾
41⁽வேற்றினத்தாரின் கையில்␢ அவர் அவர்களை ஒப்படைத்தார்;␢ அவர்களை வெறுத்தோரே␢ அவர்களை ஆட்சி செய்தனர்.⁾
42⁽அவர்கள் எதிரிகள்␢ அவர்களை ஒடுக்கினர்;␢ தங்கள் கையின்கீழ்␢ அவர்களைத் தாழ்த்தினர்.⁾
43⁽பன்முறை அவர்␢ அவர்களை விடுவித்தார்;␢ அவர்களோ திட்டமிட்டே␢ அவருக்கு எதிராகக் கலகம் செய்தனர்;␢ தங்கள் தீச்செயல்களினால்␢ அவர்கள் தாழ்நிலை அடைந்தனர்.⁾
44⁽எனினும் அவர் அவர்களது␢ மன்றாட்டுக்குச் செவிசாய்த்து,␢ அவர்களது துன்பத்தைக் கண்டு␢ மனமிரங்கினார்.⁾
45⁽அவர்களுக்கு உதவுமாறு,␢ அவர் தமது உடன்படிக்கையை␢ நினைவு கூர்ந்தார்;␢ தமது பேரன்பிற்கேற்பக்␢ கழிவிரக்கம் கொண்டார்;⁾
46⁽அவர்களைச் சிறைசெய்த␢ அனைவர் முன்னிலையிலும்␢ அவர்கள் இரக்கம் பெறும்படி செய்தார்.⁾
47⁽எங்கள் கடவுளாகிய ஆண்டவரே!␢ எங்களை விடுவித்தருளும்;␢ வேற்று நாடுகளினின்று␢ எங்களை ஒன்று சேர்த்தருளும்;␢ அப்பொழுது நாங்கள்␢ உமது திருப்பெயருக்கு␢ நன்றி செலுத்துவோம்;␢ உம்மைப் புகழ்வதில்␢ பெருமை கொள்வோம்.⁾
48⁽இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர்␢ ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவாராக!␢ மக்கள் அனைவரும்␢ ‘ஆமென்’ எனச் சொல்வார்களாக!␢ அல்லேலூயா!⁾