திருப்பாடல்கள் 121

முந்திய அடுத்த
1⁽மலைகளை நோக்கி␢ என் கண்களை␢ உயர்த்துகின்றேன்!␢ எங்கிருந்து எனக்கு உதவி வரும்?⁾ 2⁽விண்ணையும் மண்ணையும் § உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே␢ எனக்கு உதவி வரும்.⁾ 3⁽அவர் உம் கால் இடறாதபடி␢ பார்த்துக் கொள்வார்;␢ உம்மைக் காக்கும் அவர்␢ உறங்கிவிடமாட்டார்.⁾ 4⁽இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர்␢ கண்ணயர்வதுமில்லை;␢ உறங்குவதும் இல்லை.⁾ 5⁽ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்;␢ அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்;␢ அவரே உமக்கு நிழல் ஆவார்!⁾ 6⁽பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது;␢ இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது.⁾ 7⁽ஆண்டவர் உம்மை␢ எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்;␢ அவர் உம் உயிரைக் காத்திடுவார்.⁾ 8⁽நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும்␢ இப்போதும் எப்போதும்␢ ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்.⁾