திருப்பாடல்கள் 149

முந்திய அடுத்த
1⁽அல்லேலூயா!␢ ஆண்டவருக்குப் புதியதொரு § பாடலைப் பாடுங்கள்;␢ அவருடைய அன்பர் சபையில்␢ அவரது புகழைப் பாடுங்கள்.⁾ 2⁽இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக்␢ குறித்து மகிழ்ச்சி கொள்வதாக!␢ சீயோனின் மக்கள் தம் அரசரை␢ முன்னிட்டுக் களிகூர்வார்களாக!⁾ 3⁽நடனம் செய்து அவரது பெயரைப்␢ போற்றுவார்களாக;␢ மத்தளம் கொட்டி, யாழிசைத்து␢ அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!⁾ 4⁽ஆண்டவர் தம் மக்கள் மீது␢ விருப்பம் கொள்கின்றார்;␢ தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு␢ வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார்.⁾ 5⁽அவருடைய அன்பர்␢ மேன்மையடைந்து களிகூர்வராக!␢ மெத்தைகளில் சாய்ந்து␢ மகிழ்ந்து கொண்டாடுவராக!⁾ 6⁽அவர்களின் வாய்␢ இறைவனை ஏத்திப் புகழட்டும்;␢ அவர்களின் கையில் இருபுறமும்␢ கூர்மையான வாள் இருக்கட்டும்.⁾ 7⁽அவர்கள் வேற்றினத்தாரிடம்␢ பழிதீர்த்துக் கொள்வார்கள்;␢ மக்களினங்களுக்கு␢ தண்டனைத் தீர்ப்பிடுவார்கள்;⁾ 8⁽வேற்றின மன்னர்களை␢ விலங்கிட்டுச் சிறைசெய்வார்கள்;␢ உயர்குடி மக்களை␢ இரும்பு விலங்குகளால் கட்டுவார்கள்.⁾ 9⁽முன்குறித்து வைத்த தீர்ப்பை␢ அவர்களிடம் நிறைவேற்றுவார்கள்;␢ இத்தகைய மேன்மை␢ ஆண்டவர் தம் அன்பர்␢ அனைவருக்கும் உரித்தானது.␢ அல்லேலூயா!⁾