திருப்பாடல்கள் 120

முந்திய அடுத்த
1⁽நான் இன்னலுற்ற வேளையில்␢ ஆண்டவரை நோக்கி␢ மன்றாடினேன்;␢ அவரும் எனக்குச் செவி சாய்த்தார்.⁾ 2⁽ஆண்டவரே! பொய் பேசும் வாயினின்று␢ என்னை விடுவித்தருளும்;␢ வஞ்சக நாவினின்று␢ என்னைக் காத்தருளும்.⁾ 3⁽வஞ்சகம் பேசும் நாவே!␢ உனக்கு என்ன கிடைக்கும்?␢ அதற்கு மேலும் உனக்கு␢ என்னதான் கிடைக்கும்?⁾ 4⁽வீரனின் கூரிய அம்புகளும்␢ தணல் வீசும் கரிகளும்தான் கிடைக்கும்!⁾ 5⁽ஐயோ! நான் மேசேக்கில்␢ அன்னியனாய் வாழ்ந்தபோதும்,␢ கேதாரில் கூடாரங்களில்␢ தங்க நேர்ந்தபோதும்,⁾ 6⁽சமாதானத்தைக் குலைப்பவர்களோடு,␢ நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று.⁾ 7⁽நான் சமாதானத்தை நாடுவேன்;␢ அதைப் பற்றியே பேசுவேன்;␢ ஆனால், அவர்களுக்கோ␢ போர் ஒன்றில்தான் நாட்டம்!⁾