திருப்பாடல்கள் 102

முந்திய அடுத்த
1⁽ஆண்டவரே! என் மன்றாட்டைக்␢ கேட்டருளும்!␢ என் அபயக்குரல்␢ உம்மிடம் வருவதாக!⁾ 2⁽நான் இடுக்கண் உற்ற நாளிலே␢ உமது முகத்தை மறைக்காதீர்!␢ உமது செவியை␢ என் பக்கமாகத் திருப்பியருளும்!␢ நான் மன்றாடும் நாளில்␢ விரைவாய் எனக்குப் பதிலளியும்!⁾ 3⁽என் வாழ்நாள்கள்␢ புகையென மறைகின்றன;␢ என் எலும்புகள்␢ தீச்சூழையென எரிகின்றன.⁾ 4⁽என் இதயம் புல்லைப்போலத்␢ தீய்ந்து கருகுகின்றது;␢ என் உணவையும்␢ நான் உண்ண மறந்தேன்.⁾ 5⁽என் பெருமூச்சின் பேரொலியால்,␢ என் எலும்புகள்␢ சதையோடு ஒட்டிக் கொண்டன.⁾ 6⁽நான் பாலைநிலப் பறவைபோல் ஆனேன்;␢ பாழ் நிலத்தின் ஆந்தைபோல் ஆனேன்.⁾ 7⁽நான் தூக்கமின்றித் தவிக்கின்றேன்;␢ கூரைமேல் தனிமையாய் இருக்கும்␢ பறவைபோல் ஆனேன்.⁾ 8⁽என் எதிரிகள் நாள்முழுதும்␢ என்னை இழித்துரைக்கின்றனர்;␢ என்னை எள்ளி நகையாடுவோர்␢ என் பெயரைச் சொல்லிப்␢ பிறரைச் சபிக்கின்றனர்.⁾ 9⁽சாம்பலை நான்␢ உணவாகக் கொள்கின்றேன்;␢ என் மதுக்கலவையோடு␢ கண்ணீரைக் கலக்கின்றேன்.⁾ 10⁽ஏனெனில், உமது சினத்திற்கும்␢ சீற்றத்திற்கும் உள்ளானேன்;␢ நீர் என்னைத் தூக்கி எறிந்துவிட்டீர்.⁾ 11⁽மாலை நிழலைப்போன்றது␢ எனது வாழ்நாள்;␢ புல்லென நான் உலர்ந்து போகின்றேன்.⁾ 12⁽ஆண்டவரே! நீர் என்றென்றும்␢ கொலுவீற்றிருக்கின்றீர்;␢ உமது புகழ் தலைமுறைதோறும்␢ நிலைத்திருக்கும்.⁾ 13⁽நீர் எழுந்தருளி,␢ சீயோனுக்கு இரக்கம் காட்டும்;␢ இதோ! குறித்த காலம் வந்துவிட்டது.⁾ 14⁽அதன் கற்கள்மீது␢ உம் ஊழியர் பற்றுக்கொண்டுள்ளனர்;␢ அதன் அழிவை நினைத்துப்␢ பரிதவிக்கின்றனர்.⁾ 15⁽வேற்றினத்தார்␢ ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்;␢ பூவுலகின் மன்னர் யாவரும்␢ அவரது மாட்சியைக் கண்டு மருள்வர்.⁾ 16⁽ஏனெனில் ஆண்டவர்␢ சீயோனைக் கட்டியெழுப்புவார்;␢ அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்.⁾ 17⁽திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு␢ அவர் செவிகொடுப்பார்;␢ அவர்களின் மன்றாட்டை அவமதியார்.⁾ 18⁽இனி வரவிருக்கும் தலைமுறைக்கென␢ இது எழுதி வைக்கப்படட்டும்;␢ படைக்கப்படவிருக்கும் மக்கள்␢ ஆண்டவரைப் புகழட்டும்.⁾ 19⁽ஆண்டவர் தம் மேலுலகத்␢ திருத்தலத்தினின்று␢ கீழே நோக்கினார்;␢ அவர் விண்ணுலகினின்று␢ வையகத்தைக் கண்ணோக்கினார்.⁾ 20⁽அவர் சிறைப்பட்டோரின்␢ புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்;␢ சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை␢ விடுவிப்பார்.⁾ 21⁽சீயோனில் ஆண்டவரின் பெயர்␢ போற்றப்படும்.␢ எருசலேமில் அவர்தம் புகழ்␢ அறிவிக்கப்படும்.⁾ 22⁽அப்போது, மக்களினங்களும்␢ அரசுகளும் ஒன்றுதிரண்டு␢ ஆண்டவரை வழிபடுவர்.⁾ 23⁽என் வாழ்க்கைப் பாதையின் நடுவில்␢ ஆண்டவர் என் வலிமையைக்␢ குன்றச் செய்தார்; அவர்␢ என் ஆயுளைக் குறுக்கிவிட்டார்.⁾ 24⁽நான் உரைத்தது; “என் இறைவா!␢ என் வாழ்நாளின் இடையில்␢ என்னை எடுத்துக் கொள்ளாதேயும்;␢ உமது காலம் தலைமுறை␢ தலைமுறையாய் உள்ளதன்றோ?⁾ 25⁽முற்காலத்தில் நீர் பூவுலகுக்கு␢ அடித்தளமிட்டீர்;␢ விண்ணுலகம் உமது␢ கைவினைப் பொருள் அன்றோ!⁾ 26⁽அவையோ அழிந்துவிடும்;␢ நீரோ நிலைத்திருப்பீர்;␢ அவையெல்லாம் ஆடைபோல்␢ பழமையாகும்;␢ அவற்றை நீர் உடையென மாற்றுகின்றீர்;␢ அவையும் மறைந்துபோம்.⁾ 27⁽நீரோ மாறாதவர்!␢ உமது காலமும் முடிவற்றது.⁾ 28⁽உம் அடியாரின் பிள்ளைகள்␢ பாதுகாப்புடன் வாழ்வர்;␢ அவர்களின் வழிமரபினர்␢ உமது திருமுன் நிலைத்திருப்பர்!⁾