திருப்பாடல்கள் 150

முந்திய அடுத்த
1⁽அல்லேலூயா! தூயகத்தில்␢ இறைவனைப் போற்றுங்கள்!␢ வலிமைமிகு விண்விரிவில்␢ அவரைப் போற்றுங்கள்!⁾ 2⁽அவர்தம் வல்ல செயல்களுக்காய்␢ அவரைப் போற்றுங்கள்!␢ அவர்தம் எல்லையிலா␢ மாண்பினைக் குறித்து␢ அவரைப் போற்றுங்கள்!⁾ 3⁽எக்காளம் முழங்கியே␢ அவரைப் போற்றுங்கள்!␢ வீணையுடன் யாழிசைத்து␢ அவரைப் போற்றுங்கள்.⁾ 4⁽மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து␢ அவரைப் போற்றுங்கள்!␢ யாழினை மீட்டி,␢ குழலினை ஊதி␢ அவரைப் போற்றுங்கள்!⁾ 5⁽சிலம்பிடும் சதங்கையுடன்␢ அவரைப் போற்றுங்கள்!␢ ‛கலீர்’ எனும் தாளத்துடன்␢ அவரைப் போற்றுங்கள்!⁾ 6⁽அனைத்து உயிர்களே,␢ ஆண்டவரைப் புகழ்ந்திடுக!␢ அல்லேலூயா!⁾