திருப்பாடல்கள் 33

முந்திய அடுத்த
1⁽நீதிமான்களே,␢ ஆண்டவரில் களிகூருங்கள்;␢ நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது␢ பொருத்தமானதே.⁾ 2⁽யாழிசைத்து ஆண்டவருக்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ பதின் நரம்பு யாழினால்␢ அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;⁾ 3⁽புத்தம்புது பாடல் ஒன்றை␢ அவருக்குப் பாடுங்கள்;␢ திறம்பட இசைத்து␢ மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள்.⁾ 4⁽ஆண்டவரின் வாக்கு நேர்மையானது;␢ அவருடைய செயல்கள் எல்லாம்␢ நம்பிக்கைக்கு உரியவை.⁾ 5⁽அவர் நீதியையும் நேர்மையையும் § விரும்புகின்றார்;␢ அவரது பேரன்பால்␢ பூவுலகு நிறைந்துள்ளது.⁾ 6⁽ஆண்டவரது வாக்கினால்␢ வானங்கள் உண்டாயின;␢ அவரது சொல்லின் ஆற்றலால்␢ வான்கோள்கள் எல்லாம் உருவாயின.⁾ 7⁽அவர் கடல்நீரைக்␢ குவியல்போல் சேர்த்து வைத்தார்;␢ அந்நீரை ஆழ் நிலவறைகளில்␢ சேமித்து வைத்தார்.⁾ 8⁽அனைத்துலகும் ஆண்டவருக்கு அஞ்சுவதாக!␢ உலகில் வாழ்வோர் அனைவரும்␢ அவருக்கு அஞ்சி நடுங்குவராக!⁾ 9⁽அவர் சொல்லி உலகம் உண்டானது;␢ அவர் கட்டளையிட, அது நிலைபெற்றது.⁾ 10⁽வேற்றினத்தாரின் திட்டங்களை␢ ஆண்டவர் முறியடிக்கின்றார்;␢ மக்களினத்தாரின் எண்ணங்களைக்␢ குலைத்து விடுகின்றார்.⁾ 11⁽ஆண்டவரின் எண்ணங்களோ␢ என்றென்றும் நிலைத்திருக்கும்;␢ அவரது உள்ளத்தின் திட்டங்கள்␢ தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.⁾ 12⁽ஆண்டவரைத் தன் கடவுளாகக்␢ கொண்ட இனம் பேறுபெற்றது;␢ அவர் தமது உரிமைச் சொத்தாகத்␢ தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.⁾ 13⁽வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்;␢ மானிடர் அனைவரையும் காண்கின்றார்.⁾ 14⁽தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து␢ உலகெங்கும் வாழ்வோரைக் § கூர்ந்து நோக்குகின்றார்.⁾ 15⁽அவர்களின் உள்ளங்களை␢ உருவாக்குகின்றவர் அவரே!␢ அவர்களின் செயல்கள் அனைத்தையும்␢ உற்று நோக்குபவரும் அவரே!⁾ 16⁽தன் படைப் பெருக்கத்தால்␢ வெற்றிபெறும் அரசருமில்லை;␢ தன் வலிமையின் மிகுதியால்␢ உயிர் தப்பிய வீரருமில்லை.⁾ 17⁽வெற்றி பெறப்␢ போர்க்குதிரையை நம்புவது வீண்;␢ மிகுந்த வலுவுள்ளதாயினும்␢ அது விடுவிக்காது.⁾ 18⁽தமக்கு அஞ்சி நடப்போரையும்␢ தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும்␢ ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.⁾ 19அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; § அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். 20⁽நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்;␢ அவரே நமக்குத் துணையும் § கேடயமும் ஆவார்.⁾ 21⁽நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்;␢ ஏனெனில், அவரது திருப்பெயரில்␢ நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.⁾ 22⁽உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால்,␢ உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!⁾