1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
1⁽ஆண்டவர் மாண்பு மிக்கவர்;␢ நம் கடவுளின் நகரில்,␢ அவரது திருமலையில்␢ மிகுந்த புகழுக்கு உரியவர்.⁾
2⁽அழகும் உயரமுமாய் தொலை வடக்கில் திகழும்␢ சீயோன் மலை அனைத்து உலகிற்கும்␢ மகிழ்ச்சியால் இலங்குகின்றது;␢ மாவேந்தரின் நகரும் அதுவே.⁾
3⁽அதன் அரண்மனைகளில்␢ கடவுள் வீற்றிருந்து, தம்மையே␢ அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார்.⁾
4⁽இதோ! அரசர் அனைவரும் ஒன்று கூடினர்;␢ அணிவகுத்து ஒன்றாக வந்தனர்;⁾
5⁽அந்தோ! பார்த்ததும் திகைத்தனர்;␢ திகிலடைந்து ஓட்டம் பிடித்தனர்.⁾
6⁽அங்கே அச்சம் அவர்களை ஆட்கொண்டது;␢ பேறுகாலப் பெண்போல்␢ அவர்கள் துடிதுடித்தனர்.⁾
7⁽தர்சீசுக் கப்பல்களைக்␢ கீழைக் காற்றினால்␢ நீர் தகர்த்தெறிகின்றீர்.⁾
8⁽கேள்விப்பட்டவாறே␢ நேரில் யாம் கண்டோம்;␢ படைகளின் ஆண்டவரது நகரில்,␢ ஆம், கடவுளின் நகரினில் கண்டோம்;␢ கடவுள் அந்நகரை எந்நாளும்␢ நிலைத்திருக்கச் செய்வார். (சேலா)⁾
9⁽கடவுளே! உமது கோவிலின் நடுவில்␢ உம் பேரன்பை நினைந்து உருகினோம்.⁾
10⁽கடவுளே! உமது பெயரைப் போலவே,␢ உமது புகழும் பூவுலகின்␢ கடை எல்லைவரை எட்டுகின்றது;␢ உமது வலக்கை␢ நீதியை நிலைநாட்டுகின்றது.⁾
11⁽சீயோன் மலை மகிழ்வதாக!␢ யூதாவின் நகர்கள்␢ உம் நீதித்தீர்ப்புகளை முன்னிட்டு␢ அக்களிப்பனவாக!⁾
12⁽சீயோனை வலம் வாருங்கள்;␢ அதைச்சுற்றி நடைபோடுங்கள்;␢ அதன் காவல் மாடங்களை␢ எண்ணிக்கையிடுங்கள்.⁾
13⁽அதன் மதில்களைக்␢ கவனித்துப் பாருங்கள்;␢ அதன் கோட்டைகளைச்␢ சுற்றிப் பாருங்கள்;␢ அப்பொழுது, இனிவரும் தலைமுறைக்கு␢ இதை உங்களால் விவரிக்க இயலும்.⁾
14⁽இத்தகைய கடவுளே என்றென்றும்␢ நம் கடவுள்; அவரே நம்மை␢ இறுதிவரை வழி நடத்துவார்.⁾