திருப்பாடல்கள் 24

முந்திய அடுத்த
1⁽மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள␢ அனைத்தும் ஆண்டவருடையவை;␢ நிலவுலகும் அதில் வாழ்வனவும்␢ அவருக்கே சொந்தம்.⁾ 2⁽ஏனெனில், அவரே கடல்கள்மீது␢ அதற்கு அடித்தளமிட்டார்;␢ ஆறுகள்மீது அதை␢ நிலைநாட்டினவரும் அவரே.⁾ 3⁽ஆண்டவரது மலையில் ஏறத்␢ தகுதியுள்ளவர் யார்?␢ அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்?⁾ 4⁽கறைபடாத கைகளும்␢ மாசற்ற மனமும் உடையவர்;␢ பொய்த் தெய்வங்களை நோக்கித்␢ தம் உள்ளத்தை உயர்த்தாதவர்;␢ வஞ்சக நெஞ்சோடு␢ ஆணையிட்டுக் கூறாதவர்,⁾ 5⁽இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்;␢ தம் மீட்பராம் கடவுளிடமிருந்து␢ நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.⁾ 6⁽அவரை நாடுவோரின்␢ தலைமுறையினர் இவர்களே:␢ *யாக்கோபின் கடவுளது முகத்தைத்*␢ தேடுவோர் இவர்களே. (சேலா)⁾ 7⁽வாயில்களே, உங்கள் நிலைகளை␢ உயர்த்துங்கள்;␢ தொன்மைமிகு கதவுகளே,␢ உயர்ந்து நில்லுங்கள்;␢ மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.⁾ 8⁽மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?␢ வலிமையும் ஆற்றலும் கொண்ட␢ ஆண்டவர் இவர்; இவரே␢ போரில் வல்லவரான ஆண்டவர்.⁾ 9⁽வாயில்களே,␢ உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;␢ தொன்மைமிகு கதவுகளே,␢ உயர்ந்து நில்லுங்கள்;␢ மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.⁾ 10⁽மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?␢ படைகளின் ஆண்டவர் இவர்;␢ இவரே மாட்சிமிகு மன்னர். (சேலா)⁾