1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
1⁽ஆண்டவரே, உம்மை நோக்கி,␢ என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.⁾
2⁽என் கடவுளே,␢ உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்;␢ நான் வெட்கமுற விடாதேயும்;␢ என் பகைவர் என்னைக் கண்டு␢ நகைக்க விடாதேயும்.⁾
3⁽உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும்␢ வெட்கமுறுவதில்லை;␢ காரணமின்றித் துரோகம் செய்பவரோ␢ வெட்கத்திற்கு உள்ளாவர்.⁾
4⁽ஆண்டவரே, உம் பாதைகளை␢ நான் அறியச்செய்தருளும்;␢ உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.⁾
5⁽உமது உண்மை நெறியில்␢ என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்;␢ ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்;␢ உம்மையே நான் நாள் முழுவதும்␢ நம்பியிருக்கின்றேன்;⁾
6⁽ஆண்டவரே, உமது இரக்கத்தையும்,␢ உமது பேரன்பையும் நினைந்தருளும்;␢ ஏனெனில், அவை␢ தொடக்கமுதல் உள்ளவையே.⁾
7⁽என் இளமைப் பருவத்தின் பாவங்களையும்,␢ என் குற்றங்களையும் நினையாதேயும்,␢ உமது பேரன்பிற்கேற்ப␢ என்னை நினைத்தருளும்;␢ ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர்.⁾
8⁽ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்;␢ ஆகையால், அவர் பாவிகளுக்கு␢ நல்வழியைக் கற்பிக்கின்றார்.⁾
9⁽எளியோரை நேரிய வழியில்␢ அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத்␢ தமது வழியைக் கற்பிக்கின்றார்.⁾
10⁽ஆண்டவரது உடன்படிக்கையையும்␢ ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு,␢ அவருடைய பாதைகளெல்லாம்␢ பேரன்பும் உண்மையும்␢ உள்ளனவாய் விளங்கும்.⁾
11⁽ஆண்டவரே, உமது பெயரின் பொருட்டு␢ என் குற்றத்தை மன்னித்தருளும்;␢ ஏனெனில், என் குற்றம் மிகப் பெரியது.⁾
12⁽ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் எவரோ␢ அவருக்குத் தாம் தேர்ந்துகொள்ளும்␢ வழியை அவர் கற்பிப்பார்.⁾
13⁽அவர் நலமுடன் வாழ்வார்;␢ அவருடைய மரபினர் § நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வர்.⁾
14⁽ஆண்டவரின் அன்புறவு அவருக்கு␢ அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்;␢ அவர் அவர்களுக்கு தமது␢ உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்;⁾
15⁽என் கண்கள் எப்போதும்␢ ஆண்டவரை நோக்கியிருக்கின்றன;␢ அவரே என் கால்களை␢ வலையிலிருந்து விடுவிப்பார்.⁾
16⁽என்னை நோக்கித் திரும்பி␢ என் மீது இரங்கும்; ஏனெனில்,␢ நான் துணையற்றவன்; துயருறுபவன்.⁾
17⁽என் வேதனைகள் பெருகிவிட்டன;␢ என் துன்பத்தினின்று␢ என்னை விடுவித்தருளும்.⁾
18⁽என் சிறுமையையும்␢ வருத்தத்தையும் பாரும்;␢ என் பாவங்கள் அனைத்தையும்␢ மன்னித்தருளும்.⁾
19⁽என் எதிரிகள் பெருகிவிட்டதைப் பாரும்.␢ அவர்கள் எத்துணைக் கொடுமையாய் § என்னை வெறுக்கின்றனர்!⁾
20⁽என் உயிரைக் காப்பாற்றும்;␢ என்னை விடுவித்தருளும்;␢ உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ள␢ என்னை வெட்கமுற விடாதேயும்.⁾
21⁽வாய்மையும் நேர்மையும்␢ எனக்கு அரணாய் இருக்கட்டும்;␢ ஏனெனில், நான் உம்மையே␢ நம்பியிருக்கின்றேன்.⁾
22⁽கடவுளே, இஸ்ரயேலரை␢ அவர்கள் படும் துன்பங்கள்␢ அனைத்தினின்றும் மீட்டருளும்.⁾