1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
1⁽அல்லேலூயா! ஆண்டவர்மீது␢ அன்புகூர்கின்றேன்;␢ ஏனெனில், எனக்கு இரங்குமாறு␢ நான் எழுப்பிய குரலை␢ அவர் கேட்டருளினார்.⁾
2⁽அவரை நான் மன்றாடிய நாளில்,␢ எனக்கு அவர் செவிசாய்த்தார்.⁾
3⁽சாவின் கயிறுகள்␢ என்னைப் பிணித்துக் கொண்டன;␢ பாதாளத்தின் துன்பங்கள்␢ என்னைப் பற்றிக் கொண்டன;␢ துன்பமும் துயரமும்␢ என்னை ஆட்கொண்டன.⁾
4⁽நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்;␢ ‛ஆண்டவரே! என் உயிரைக்␢ காத்தருளும்’ என்று கெஞ்சினேன்.⁾
5⁽ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்;␢ நம் கடவுள் இரக்கம் உள்ளவர்.⁾
6⁽எளிய மனத்தோரை␢ ஆண்டவர் பாதுகாக்கின்றார்;␢ நான் தாழ்த்தப்பட்டபோது␢ எனக்கு மீட்பளித்தார்.⁾
7⁽‛என் நெஞ்சே! நீ மீண்டும்␢ அமைதிகொள்; ஏனெனில்,␢ ஆண்டவர் உனக்கு நன்மை செய்தார்’.⁾
8⁽என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்;␢ என் கண் கலங்காதபடியும்␢ என் கால் இடறாதபடியும் செய்தார்.⁾
9⁽உயிர் வாழ்வோர் நாட்டில், நான்␢ ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.⁾
10⁽‛மிகவும் துன்புறுகிறேன்!’ என்று␢ சொன்னபோதும்␢ நான் நம்பிக்கையோடு இருந்தேன்.⁾
11⁽‛எந்த மனிதரையும் நம்பலாகாது’ என்று␢ என் மனக்கலக்கத்தில்␢ நான் சொன்னேன்.⁾
12⁽ஆண்டவர் எனக்குச் செய்த␢ எல்லா நன்மைகளுக்காகவும்␢ நான் அவருக்கு␢ என்ன கைம்மாறு செய்வேன்?⁾
13⁽மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து,␢ ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.⁾
14⁽இதோ! ஆண்டவருடைய மக்கள்␢ அனைவரின் முன்னிலையில்␢ அவருக்கு என் பொருத்தனைகளை␢ நிறைவேற்றுவேன்.⁾
15⁽ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு␢ அவரது பார்வையில்␢ மிக மதிப்புக்குரியது.⁾
16⁽ஆண்டவரே! நான் உண்மையாகவே␢ உம் ஊழியன்; நான் உம் பணியாள்;␢ உம் அடியாளின் மகன்;␢ என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.⁾
17⁽நான் உமக்கு␢ நன்றிப் பலி செலுத்துவேன்;␢ ஆண்டவராகிய உம் பெயரைத்␢ தொழுவேன்;⁾
18⁽இப்பொழுதே உம் மக்கள்␢ அனைவரின் முன்னிலையில்␢ ஆண்டவரே! உமக்கு என்␢ பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்;⁾
19⁽உமது இல்லத்தில் முற்றங்களில்,␢ எருசலேமின் நடுவில்,␢ ஆண்டவரே! உமக்கு என்␢ பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.␢ அல்லேலூயா!⁾