திருப்பாடல்கள் 88

முந்திய அடுத்த
1⁽ஆண்டவரே! என் மீட்பின்␢ கடவுளே!␢ பகலில் கதறுகிறேன்;␢ இரவில் உமது முன்னிலையில்␢ புலம்புகின்றேன்.⁾ 2⁽என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக!␢ என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்!⁾ 3⁽ஏனெனில், என் உள்ளம்␢ துன்பத்தால் நிறைந்துள்ளது;␢ என் உயிர் பாதாளத்தை நெருங்கிவிட்டது.⁾ 4⁽படுகுழிக்குள் இறங்குவோருள் ஒருவராக␢ நானும் கணிக்கப்படுகின்றேன்;␢ வலுவிழந்த மனிதரைப்போல் ஆனேன்.⁾ 5⁽இறந்தோருள் ஒருவராகக்␢ கைவிடப்பட்டேன்;␢ கொலையுண்டு கல்லறையில்␢ கிடப்பவர்போல் ஆனேன்;␢ அவர்களை ஒருபோதும்␢ நீர் நினைப்பதில்லை;␢ அவர்கள் உமது பாதுகாப்பினின்று␢ அகற்றப்பட்டார்கள்.⁾ 6⁽ஆழமிகு படுகுழிக்குள்␢ என்னைத் தள்ளிவிட்டீர்!␢ காரிருள் பள்ளங்களுக்குள்␢ என்னைக் கைவிட்டு விட்டீர்.⁾ 7⁽உமது சினம் என்னை அழுத்துகின்றது;␢ உம் அலைகள் அனைத்தும்␢ என்னை வருத்துகின்றன. (சேலா)⁾ 8⁽எனக்கு அறிமுகமானவர்களை␢ என்னைவிட்டு விலகச்செய்தீர்;␢ அவர்களுக்கு என்னை␢ அருவருப்பாக்கினீர்;␢ நான் வெளியேற இயலாவண்ணம்␢ அடைபட்டுள்ளேன்.⁾ 9⁽துயரத்தினால் என் கண்␢ மங்கிப்போயிற்று;␢ ஆண்டவரே! நாள்தோறும்␢ உம்மை மன்றாடுகின்றேன்;␢ உம்மை நோக்கி␢ என் கைகளைக் கூப்புகின்றேன்.⁾ 10⁽இறந்தோர்க்காகவா நீர்␢ வியத்தகு செயல்கள் செய்வீர்?␢ கீழுலகின் ஆவிகள் எழுந்து␢ உம்மைப் புகழுமோ? (சேலா)⁾ 11⁽கல்லறையில் உமது பேரன்பு␢ எடுத்துரைக்கப்படுமா?␢ அழிவின் தலத்தில்␢ உமது உண்மை அறிவிக்கப்படுமா?⁾ 12⁽இருட்டினில் உம் அருஞ்செயல்கள்␢ அறியப்படுமா?␢ மறதி உலகில்␢ உம் நீதிநெறி உணரப்படுமா?⁾ 13⁽ஆண்டவரே! நானோ␢ உம்மை நோக்கிக் கதறுகின்றேன்;␢ காலையில் உம்மை நோக்கி␢ மன்றாடுகின்றேன்.⁾ 14⁽ஆண்டவரே! என்னை ஏன்␢ தள்ளிவிடுகின்றீர்?␢ உமது முகத்தை என்னிடமிருந்து␢ ஏன் மறைக்கின்றீர்?⁾ 15⁽என் இளமைமுதல் நான் துன்புற்று␢ மடியும் நிலையில் உள்ளேன்;␢ உம்மால் வந்த பெருந் திகிலால்␢ தளர்ந்து போனேன்.⁾ 16⁽உமது வெஞ்சினம்␢ என்னை மூழ்கடிக்கின்றது;␢ உம் அச்சந்தரும் தாக்குதல்கள்␢ என்னை அழிக்கின்றன.⁾ 17⁽அவை நாள் முழுவதும்␢ வெள்ளப்பெருக்கென␢ என்னைச் சூழ்ந்து கொண்டன;␢ அவை எப்பக்கமும்␢ என்னை வளைத்துக்கொண்டன.⁾ 18⁽என் அன்பரையும் தோழரையும்␢ என்னைவிட்டு அகற்றினீர்;␢ இருளே என் நெருங்கிய நண்பன்.⁾