திருப்பாடல்கள் 89

முந்திய அடுத்த
1⁽ஆண்டவரின் பேரன்பைப்பற்றி␢ நான் என்றும் பாடுவேன்;␢ நீர் உண்மையுள்ளவர் எனத்␢ தலைமுறைதோறும்␢ என் நாவால் அறிவிப்பேன்.⁾ 2⁽உமது பேரன்பு␢ என்றென்றும் நிலைத்துள்ளது என்று␢ அறிவிப்பேன்;␢ உமது உண்மை வானைப்போல்␢ உறுதியானது.⁾ 3⁽நீர் உரைத்தது:␢ ‛நான் தேர்ந்துகொண்டவனோடு␢ உடன்படிக்கை செய்துகொண்டேன்;␢ என் ஊழியன் தாவீதுக்கு␢ ஆணையிட்டு நான் கூறியது:⁾ 4⁽உன் வழிமரபை␢ என்றென்றும் நிலைக்கச் செய்வேன்;␢ உன் அரியணையைத்␢ தலைமுறை தலைமுறையாக␢ நிலைத்திருக்கச் செய்வேன்’ (சேலா)⁾ 5⁽ஆண்டவரே, வானங்கள்␢ உம் வியத்தகு செயல்களைப் § புகழ்கின்றன;␢ தூயவர் குழுவினில்␢ உமது உண்மை விளங்கும்.⁾ 6⁽வான்வெளியில்␢ ஆண்டவருக்கு நிகரானவர் யார்?␢ தெய்வ மைந்தர் குழுவில்␢ ஆண்டவருக்கு இணையானவர் யார்?⁾ 7⁽தூயவர் குழுவில்␢ அவர் அஞ்சுதற்குரிய இறைவன்;␢ அவரைச் சூழ்ந்துள்ள அனைவருக்கும்␢ மேலாக அஞ்சுதற்கு உரியவர்.⁾ 8⁽படைகளின் கடவுளாகிய ஆண்டவரே!␢ உம்மைப்போல் ஆற்றல் மிக்கவர் யார்?␢ ஆண்டவரே! உம் உண்மை␢ உம்மைச் சூழ்ந்துள்ளது.⁾ 9⁽கொந்தளிக்கும் கடல்மீது␢ நீர் ஆட்சி செலுத்துகின்றீர்;␢ பொங்கியெழும் அதன் அலைகளை␢ அடக்குகின்றீர்.⁾ 10⁽இராகாபைப் பிணமென நசுக்கினீர்;␢ உம் எதிரிகளை␢ உம் வலிய புயத்தால் சிதறடித்தீர்.⁾ 11⁽வானமும் உமதே! வையமும் உமதே!␢ பூவுலகையும் அதில் நிறைந்துள்ள␢ அனைத்தையும்␢ நிலைநிறுத்தியவர் நீரே!⁾ 12⁽வடக்கையும் தெற்கையும் படைத்தவர் நீரே!␢ தாபோரும் எர்மோனும் உம் பெயரைக்␢ களிப்புடன் புகழ்கின்றன.⁾ 13⁽வன்மைமிக்கது உமது புயம்;␢ வலிமைகொண்டது உமது கை;␢ உயர்ந்து நிற்பது உம் வலக்கை;⁾ 14⁽நீதியும் நேர்மையும்␢ உம் அரியணைக்கு அடித்தளம்;␢ பேரன்பும் உண்மையும்␢ உமக்கு முன்னே செல்லும்.⁾ 15⁽விழாவின் பேரொலியை␢ அறிந்த மக்கள் பேறுபெற்றோர்;␢ ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில்␢ அவர்கள் நடப்பார்கள்.⁾ 16⁽அவர்கள் நாள்முழுவதும்␢ உம் பெயரில் களிகூர்வார்கள்;␢ உமது நீதியால்␢ அவர்கள் மேன்மை அடைவார்கள்.⁾ 17⁽ஏனெனில், நீரே அவர்களது␢ ஆற்றலின் மேன்மை;␢ உமது தயவால் எங்கள் வலிமை␢ உயர்த்தப்பட்டுள்ளது.⁾ 18⁽நம் கேடயம் ஆண்டவருக்கு உரியது;␢ நம் அரசர் இஸ்ரயேலின் தூயவருக்கு உரியவர்.⁾ 19⁽முற்காலத்தில் உம் பற்றுமிகு அடியார்க்கு␢ நீர் காட்சி தந்து கூறியது:␢ “வீரன் ஒருவனுக்கு வலிமை அளித்தேன்;␢ மக்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்டவனை § உயர்த்தினேன்.⁾ 20⁽என் ஊழியன் தாவீதைக்␢ கண்டுபிடித்தேன்;␢ என் திருத்தைலத்தால் அவனுக்குத்␢ திருப்பொழிவு செய்தேன்.⁾ 21⁽என் கை எப்பொழுதும்␢ அவனோடு இருக்கும்;␢ என் புயம் உண்மையாகவே␢ அவனை வலிமைப்படுத்தும்.⁾ 22⁽எதிரி எவனாலும்␢ அவனை வஞ்சிக்க முடியாது;␢ தீயவன் எவனாலும்␢ அவனை ஒடுக்க இயலாது.⁾ 23⁽அவனுடைய எதிரிகளை␢ அவன் கண்முன் நசுக்குவேன்;␢ அவனை வெறுப்போரை␢ வெட்டிக் கொல்வேன்.⁾ 24⁽என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும்␢ அவனோடு இருக்கும்;␢ என் பெயரால் அவனது வலிமை␢ உயர்த்தப்படும்.⁾ 25⁽அவன் கையைக் கடல்வரைக்கும்␢ அவன் வலக்கையை ஆறுகள் வரைக்கும்␢ எட்டச் செய்வேன்.⁾ 26⁽‛நீரே என் தந்தை, என் இறைவன்,␢ என் மீட்பின் பாறை’ என்று␢ அவன் என்னை அழைப்பான்.⁾ 27⁽நான் அவனை␢ என் தலைப்பேறு ஆக்குவேன்;␢ மண்ணகத்தின் மாபெரும்␢ மன்னன் ஆக்குவேன்.⁾ 28⁽அவன்மீது கொண்ட பேரன்பு␢ என்றும் நிலைக்குமாறு செய்வேன்;␢ அவனோடு நான் செய்துகொண்ட␢ உடன்படிக்கையும்␢ எப்பொழுதும் நிலைத்திருக்கும்.⁾ 29⁽அவனது வழிமரபை␢ என்றென்றும் நிலைநிறுத்துவேன்;␢ அவனது அரியணையை␢ வான்வெளி உள்ளவரை␢ நிலைக்கச் செய்வேன்.⁾ 30⁽அவன் புதல்வர்␢ என் திருச்சட்டத்தைக் கைவிட்டாலோ,␢ என் நீதிநெறிகளின்படி நடக்காவிடிலோ,⁾ 31⁽என் விதிகளை மீறினாலோ,␢ என் கட்டளைகளைக்␢ கடைப்பிடிக்காவிடிலோ,⁾ 32⁽அவர்களது குற்றத்திற்காக␢ அவர்களைப் பிரம்பினால் தண்டிப்பேன்;␢ அவர்களின் தீச்செயலுக்காக␢ அவர்களைக் கசையால் அடிப்பேன்;⁾ 33⁽ஆயினும், என் பேரன்பை␢ தாவீதைவிட்டு விலக்கமாட்டேன்;␢ என் வாக்குப்பிறாழாமையினின்று␢ வழுவமாட்டேன்.⁾ 34⁽என் உடன்படிக்கையை␢ நான் மீறமாட்டேன்.␢ என் வாக்குறுதியை␢ நான் மாற்றமாட்டேன்.⁾ 35⁽ஒரே முறையாய் என் புனிதத்தின் மீது␢ ஆணையிட்டுக் கூறினேன்;␢ ஒருபோதும் அவனுக்கு நான்␢ பொய் உரைக்கமாட்டேன்.⁾ 36⁽அவனது வழிமரபு␢ என்றென்றும் நிலைத்திருக்கும்;␢ அவனது அரியணை␢ கதிரவன் உள்ளளவும்␢ என்முன் நிலைக்கும்.⁾ 37⁽அது விண்ணின் உண்மையான␢ சான்றென உறுதியாயிருக்கும்;␢ நிலாவென என்றென்றும்␢ நிலைத்திருக்கும்.” (சேலா)⁾ 38⁽ஆயினும், திருப்பொழிவு பெற்றவரை␢ இப்போது நீர்␢ புறக்கணித்துத் தள்ளிவிட்டீர்;␢ அவர்மீது கடுஞ்சினம் கொண்டுள்ளீர்.⁾ 39⁽உம் ஊழியருடன் செய்துகொண்ட␢ உடன்படிக்கையை வெறுத்து ஒதுக்கினீர்;␢ அவரது மணிமுடியைப்␢ புழுதில் தள்ளி இழிவுபடுத்தினீர்.⁾ 40⁽அவருடைய மதில்களைத்␢ தகர்த்துவிட்டீர்;␢ அவருடைய அரண்களைப்␢ பாழடையச் செய்தீர்.⁾ 41⁽வழிப்போக்கர் அனைவரும்␢ அவரைக் கொள்ளையிடுகின்றனர்;␢ அடுத்து வாழ்வோரின் பழிப்புக்கு␢ அவர் ஆளானார்.⁾ 42⁽அவருடைய எதிரிகளின் கை␢ ஓங்கச் செய்தீர்;␢ அவருடைய பகைவர் அனைவரும்␢ அக்களிக்கச் செய்தீர்.⁾ 43⁽அவரது வாளின் முனையை␢ வளைத்துவிட்டீர்;␢ போரில் அவரால்␢ எதிர்த்து நிற்க முடியாதபடி செய்தீர்.⁾ 44⁽அவரது மாட்சி␢ அவரைவிட்டு விலகச் செய்தீர்;␢ அவரது அரியணையைக்␢ கீழே தள்ளிவிட்டீர்,⁾ 45⁽அவரது இளமையைச் சுருக்கிவிட்டீர்;␢ அவருக்கு வெட்கத்தை␢ ஆடையாக்கினீர். (சேலா)⁾ 46⁽எவ்வளவு காலம் மறைந்திருப்பீர்␢ ஆண்டவரே! என்றென்றுமா?␢ எவ்வளவு காலம் உமது சினம்␢ நெருப்பென எரிந்து கொண்டிருக்கும்?⁾ 47⁽எங்கள் ஆயுள் எவ்வளவு குறுகியது␢ என்பதை நினைத்தருளும்;␢ மானிடர் அனைவரையும்␢ வீணாகவா படைத்துள்ளீர்?⁾ 48⁽என்றும் சாவைக்␢ காணாமல் இருப்பவர் எவர்?␢ பாதாளத்தின் பிடியினின்று தன்னைக்␢ காத்துக் கொள்பவர் எவர்? (சேலா)⁾ 49⁽என் தலைவரே! தொடக்க காலத்தில்␢ நீர் காட்டிய பேரன்பு எங்கே?␢ தாவீதுக்கு உமது␢ வாக்குப் பிறாழாமையை முன்னிட்டு␢ உறுதியாகக் கூறியது எங்கே?⁾ 50⁽என் தலைவரே!␢ உம் ஊழியர்மீது சுமத்தப்படும்␢ பழியை நினைத்துப்பாரும்;␢ மக்களினங்களின் பழிச்சொற்கள் § அனைத்தையும்␢ என் நெஞ்சில் தாங்குகிறேன்.⁾ 51⁽ஆண்டவரே! உம் எதிரிகள்␢ அவர் மேல் பழி சுமத்துகின்றனர்;§அவர்கள் உம்மால்␢ திருப்பொழிவு பெற்றவரைச்␢ சென்றவிடமெல்லாம் தூற்றுகின்றனர்.⁾ 52⁽ஆண்டவர் என்றென்றும்␢ புகழப்பெறுவாராக!␢ ஆமென், ஆமென்.⁾