திருப்பாடல்கள் 98

முந்திய அடுத்த
1⁽ஆண்டவருக்குப் புதியதொரு␢ பாடல் பாடுங்கள்;␢ ஏனெனில், அவர் வியத்தகு␢ செயல்கள் புரிந்துள்ளார்.␢ அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும்␢ அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.⁾ 2⁽ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்;␢ பிற இனத்தார் கண்முன்னே␢ தம் நீதியை வெளிப்படுத்தினார்.⁾ 3⁽இஸ்ரயேல் வீட்டாருக்கு␢ வாக்களிக்கப்பட்ட␢ தமது பேரன்பையும் உறுதிமொழியையும்␢ அவர் நினைவுகூர்ந்தார்.␢ உலகெங்குமுள அனைவரும்␢ நம் கடவுள் அருளிய␢ விடுதலையைக் கண்டனர்.⁾ 4⁽உலகெங்கும் வாழ்வோரே!␢ அனைவரும் ஆண்டவரை␢ ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!␢ மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப்␢ புகழ்ந்தேத்துங்கள்.⁾ 5⁽யாழினை மீட்டி␢ ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்;␢ யாழினை மீட்டி இனிய குரலில்␢ அவரை வாழ்த்திப் பாடுங்கள்.⁾ 6⁽ஆண்டவராகிய அரசரின் முன்னே␢ எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி␢ ஆர்ப்பரித்துப் பாடுங்கள்.⁾ 7⁽கடலும் அதில் நிறைந்தவையும்␢ உலகும் அதில் உறைபவையும்␢ முழங்கிடுக!⁾ 8⁽ஆறுகளே! கைகொட்டுங்கள்;␢ மலைகளே! ஒன்றுகூடுங்கள்;⁾ 9⁽ஆண்டவர் முன்னிலையில்␢ மகிழ்ந்து பாடுங்கள்;␢ ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்;␢ பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்;␢ மக்களினங்களை நேர்மையுடன்␢ ஆட்சி செய்வார்.⁾