திருப்பாடல்கள் 31

முந்திய அடுத்த
1⁽ஆண்டவரே, உம்மிடம் நான்␢ அடைக்கலம் புகுந்துள்ளேன்;␢ நான் ஒருபோதும்␢ வெட்கமடைய விடாதேயும்;␢ உமது நீதிக்கேற்ப␢ என்னை விடுவித்தருளும்;⁾ 2⁽உம் செவிகளை␢ என் பக்கம் திருப்பியருளும்;␢ விரைவில் என்னை மீட்டருளும்;␢ எனக்கு அடைக்கலம் தரும்␢ கற்பாறையாய் இரும்;␢ என்னைப் பாதுகாக்கும்␢ வலிமைமிகு கோட்டையாய் இரும்.⁾ 3⁽ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே;␢ உமது பெயரின் பொருட்டு␢ எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும்.⁾ 4⁽அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள␢ வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்;␢ ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம்.⁾ 5⁽உமது கையில்␢ என் உயிரை ஒப்படைக்கின்றேன்;␢ வாக்குப் பிறழாத இறைவனாகிய␢ ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளினீர்.⁾ 6⁽நானோ, பயனற்ற சிலைகளில்␢ பற்றுடையோரை வெறுத்து,␢ ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்கின்றேன்.⁾ 7⁽உமது பேரன்பில் நான் களிகூர்வேன்;␢ அக்களிப்பேன்;␢ என் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீர்;␢ என் இக்கட்டுகளையும்␢ நீர் அறிந்துள்ளீர்.⁾ 8⁽என் எதிரியின் கையில்␢ என்னை நீர் விட்டுவிடவில்லை;␢ அகன்ற இடத்தில் என்னைக்␢ காலூன்றி நிற்கவைத்தீர்.⁾ 9⁽ஆண்டவரே, எனக்கு இரங்கும்;␢ ஏனெனில் நான்␢ இக்கட்டான நிலையில் உள்ளேன்;␢ துயரத்தால் என் கண்ணும் என் உயிரும்␢ என் உடலும் தளர்ந்து போயின.⁾ 10⁽என் வாழ்க்கை␢ வருத்தத்திலேயே கடந்து செல்கின்றது;␢ ஆம், என் வாழ்நாள்␢ புலம்புவதிலேயே கழிகின்றது;␢ துயரத்தால் என் வலிமை␢ குறைந்து போகின்றது;␢ என் எலும்புகள் தளர்ந்து போகின்றன.⁾ 11⁽என் பகைவர் அனைவரின்␢ இகழ்ச்சிக்கு உள்ளானேன்;␢ என்னை அடுத்திருப்போரின்␢ பேரிழிவுக்கு ஆளானேன்;␢ என் நண்பர்களுக்குப் பேரச்சம் வருவித்தேன்;␢ என்னைத் தெருவில் பார்ப்போர்␢ என்னிடமிருந்து விலகி ஓடுகின்றனர்.⁾ 12⁽இறந்தோர் போல் நினைவினின்று␢ நான் அகற்றப்பட்டேன்;␢ உடைந்துபோன மட்கலம்போல் ஆனேன்.⁾ 13⁽பலர் என்மீது பழிசுமத்தியது␢ என் காதில் விழுந்தது;␢ எப்பக்கமும் பேரச்சம் சூழ்ந்தது.␢ அவர்கள் ஒன்றுகூடி␢ எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தார்கள்;␢ என் உயிரைப் பறிக்கத்␢ திட்டம் தீட்டினார்கள்.⁾ 14⁽ஆண்டவரே, நான் உம்மீது␢ நம்பிக்கை வைத்துள்ளேன்;␢ ‛நீரே என் கடவுள்’ என்று சொன்னேன்.⁾ 15⁽என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும்␢ உமது கையில் உள்ளது;␢ என் எதிரிகளின் கையினின்றும்␢ என்னைத் துன்புறுத்துவோரின்␢ கையினின்றும் என்னை விடுவித்தருளும்.⁾ 16⁽உமது முகத்தின் ஒளி␢ அடியேன் மீது வீசும்படி செய்யும்;␢ உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.⁾ 17⁽ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடினேன்;␢ என்னை வெட்கமுற விடாதேயும்;␢ பொல்லார் வெட்கிப்போவார்களாக!␢ பாதாளத்தில் வாயடைத்துப் போவார்களாக!⁾ 18⁽பொய்சொல்லும் வாய்␢ அடைபட்டுப் போவதாக!␢ செருக்கும் பழிப்புரையும் கொண்டு,␢ நேர்மையாளருக்கு எதிராக␢ இறுமாப்புடன் பேசும் நா § கட்டுண்டு கிடப்பதாக!⁾ 19⁽உமக்கு அஞ்சி நடப்போர்க்கு␢ நீர் வைத்திருக்கும் நன்மை␢ எத்துணைப் பெரிது!␢ உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு␢ மானிடர் முன்னிலையில்␢ நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி!⁾ 20⁽மனிதரின் சூழ்ச்சியினின்று␢ அவர்களைக் காப்பாற்றி␢ உமது முன்னிலையின்␢ மறைப்பினுள் வைத்துள்ளீர்!␢ நாவுகள் கிளப்பும் பூசலினின்று␢ அவர்களைப் பாதுகாத்து␢ உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்!⁾ 21⁽ஆண்டவர் போற்றி! போற்றி!␢ ஏனெனில், முற்றுகையிடப்பட்ட நகரினில்,␢ அவர் தம் பேரன்பை வியத்தகு முறையில்␢ எனக்கு விளங்கச் செய்தார்.⁾ 22⁽நானோ, கலக்கமுற்ற நிலையில்␢ ‛உமது பார்வையினின்று␢ விலக்கப்பட்டேன்’ என்று␢ சொல்லிக் கொண்டேன்;␢ ஆனால், நான் உம்மிடம்␢ உதவிக்காக வேண்டினபோது,␢ நீர் என் கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்தீர்.⁾ 23⁽ஆண்டவரின் அடியார்களே,␢ அவரிடம் அன்பு கொள்ளுங்கள்;␢ ஆண்டவர் பற்றுறுதியுடையோரைப்␢ பாதுகாக்கின்றார்; ஆனால்,␢ இறுமாப்புடன் நடப்போர்க்கு அவர்␢ முழுமையாய்ப் பதிலடி கொடுக்கின்றார்.⁾ 24⁽ஆண்டவருக்காக␢ நம்பிக்கையுடன் காத்திருப்போரே,␢ நீங்கள் அனைவரும் உள்ளத்தில்␢ வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள்.⁾