திருப்பாடல்கள் 95

முந்திய அடுத்த
1⁽வாருங்கள்; ஆண்டவரைப்␢ புகழ்ந்து பாடுங்கள்;␢ நமது மீட்பின் பாறையைப்␢ போற்றி ஆர்ப்பரியுங்கள்.⁾ 2⁽நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்;␢ புகழ்ப் பாக்களால் அவரைப்␢ போற்றி ஆர்ப்பரிப்போம்.⁾ 3⁽ஏனெனில், ஆண்டவர்␢ மாண்புமிகு இறைவன்;␢ தெய்வங்கள் அனைத்திற்கும்␢ மேலான பேரரசர்.⁾ 4⁽பூவுலகின் ஆழ்பகுதிகள்␢ அவர்தம் கையில் உள்ளன;␢ மலைகளின் கொடுமுடிகளும்␢ அவருக்கே உரியன.⁾ 5⁽கடலும் அவருடையதே;␢ அவரே அதைப் படைத்தார்;␢ உலர்ந்த தரையையும்␢ அவருடைய கைகளே உருவாக்கின.⁾ 6⁽வாருங்கள்; தாள்பணிந்து␢ அவரைத் தொழுவோம்;␢ நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன்␢ முழந்தாளிடுவோம்.⁾ 7⁽அவரே நம் கடவுள்;␢ நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;␢ நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள்.␢ இன்று நீங்கள் அவரது குரலுக்குச்␢ செவிகொடுத்தால் எத்துணை நலம்!⁾ 8⁽அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில்␢ மாசாவிலும் செய்ததுபோல்,␢ உங்கள் இதயத்தைக்␢ கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.⁾ 9⁽அங்கே உங்கள் மூதாதையர்␢ என்னைச் சோதித்தனர்;␢ என் செயல்களைக் கண்டிருந்தும்␢ என்னைச் சோதித்துப் பார்த்தனர்.⁾ 10⁽நாற்பது ஆண்டளவாய்␢ அந்தத் தலைமுறை␢ எனக்கு வெறுப்பூட்டியதால்,␢ நான் உரைத்தது: ‛அவர்கள்␢ உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்;␢ என் வழிகளை அறியாதவர்கள்’.⁾ 11⁽எனவே, நான் சினமுற்று,␢ ‛நான் அளிக்கும்␢ இளைப்பாற்றியின் நாட்டிற்குள்␢ நுழையவே மாட்டார்கள்’ என்று␢ ஆணையிட்டுக் கூறினேன்.⁾