திருப்பாடல்கள் 83

முந்திய அடுத்த
1⁽கடவுளே! மௌனமாய் இராதேயும்;␢ பேசாமல் இராதேயும்;␢ இறைவனே! அமைதியாய் இராதேயும்.⁾ 2⁽ஏனெனில், உம் எதிரிகள்␢ அமளி செய்கின்றார்கள்;␢ உம்மை வெறுப்போர்␢ தலைதூக்குகின்றார்கள்.⁾ 3⁽உம் மக்களுக்கு எதிராக␢ வஞ்சகமாய்ச் சதி செய்கின்றார்கள்;␢ உம் பாதுகாப்பில் உள்ளோர்க்கு எதிராகச்␢ சூழ்ச்சி செய்கின்றார்கள்.⁾ 4⁽அவர்கள் கூறுகின்றார்கள்;␢ ‛ஓர் இனமாக அவர்களை இல்லாதவாறு␢ ஒழித்திடுவோம்;␢ இஸ்ரயேலின் பெயரை␢ எவரும் நினையாதவாறு செய்திடுவோம்.’⁾ 5⁽அவர்கள் ஒருமனப்பட்டுச்␢ சதி செய்கின்றார்கள்;␢ உமக்கு எதிராக␢ உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.⁾ 6⁽ஏதோமின் கூடாரத்தார், இஸ்மயேலர்,␢ மோவாபியர், அக்ரியர்,⁾ 7⁽கெபாலியர், அம்மோனியர், அமலேக்கியர்,␢ பெலிஸ்தியர் மற்றும்␢ தீர்வாழ் மக்களே அவர்கள்.⁾ 8⁽அவர்களோடு அசீரியரும் சேர்ந்துகொண்டு,␢ லோத்தின் மைந்தருக்கு␢ வலக்கையாய் இருந்தனர். (சேலா)⁾ 9₍மிதியானுக்கும், கீசோன் ஆற்றின் அருகே␢ சீசராவுக்கும் யாபீனுக்கும் செய்தது போல,␢ அவர்களுக்கும் செய்தருளும்.₎ 10⁽அவர்கள் ஏந்தோரில் அழிக்கப்பட்டார்கள்;␢ அவர்கள் மண்ணுக்கு உரமானார்கள்.⁾ 11⁽ஓரேபுக்கும் செயேபுக்கும் செய்ததுபோல்␢ அவர்களின் உயர்குடி மக்களுக்கும்␢ செய்தருளும்! § செபாருக்கும் சல்முன்னாவுக்கும்␢ செய்ததுபோல் அவர்களின்␢ தலைவர்களுக்கும் செய்தருளும்.⁾ 12⁽ஏனெனில், ‛கட‌வுளின் மேய்ச்சல் நிலத்தை␢ நமக்கு உரிமையாக்கிக் கொள்வோம்’␢ என்று அவர்கள் கூறினார்கள்.⁾ 13⁽என் கடவுளே! சூறாவளியில் புழுதியென,␢ காற்றில் பதரென␢ அவர்களை ஆக்கியருளும்.⁾ 14⁽நெருப்பு காட்டை எரிப்பது போலவும்,␢ தீக்கனல் மலைகளைச்␢ சுட்டெரிப்பது போலவும்␢ அவர்களுக்குச் செய்தருளும்.⁾ 15⁽உமது புயலால்␢ அவர்களைத் துரத்திவிடும்!␢ உமது சூறாவளியால்␢ அவர்களைத் திகிலடையச் செய்யும்.⁾ 16⁽ஆண்டவரே, மானக்கேட்டினால்␢ அவர்கள் முகத்தை மூடும்;␢ அப்பொழுதுதான் அவர்கள்␢ உமது பெயரை நாடுவார்கள்.⁾ 17⁽அவர்கள் என்றென்றும்␢ வெட்கிக் கலங்குவார்களாக!␢ நாணமுற்று அழிந்து போவார்களாக!⁾ 18⁽‛ஆண்டவர்’ என்னும்␢ பெயர் தாங்கும் உம்மை,␢ உலகனைத்திலும் உன்னதரான உம்மை,␢ அவர்கள் அறிந்து கொள்வார்களாக!⁾