திருப்பாடல்கள் 63

முந்திய அடுத்த
1⁽கடவுளே! நீரே என் இறைவன்!␢ உம்மையே நான் நாடுகின்றேன்;␢ என் உயிர் உம்மீது␢ தாகம் கொண்டுள்ளது;␢ நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல␢ என் உடல் உமக்காக ஏங்குகின்றது.⁾ 2⁽உம் ஆற்றலையும் மாட்சியையும்␢ காண விழைந்து␢ உம் தூயகம் வந்து␢ உம்மை நோக்குகின்றேன்.⁾ 3⁽ஏனெனில், உமது பேரன்பு␢ உயிரினும் மேலானது;␢ என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன.⁾ 4⁽என் வாழ்க்கை முழுவதும்␢ இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்;␢ கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.⁾ 5⁽அறுசுவை விருந்தில்␢ நிறைவடைவதுபோல␢ என் உயிர் நிறைவடையும்;␢ என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால்␢ உம்மைப் போற்றும்.⁾ 6⁽நான் படுத்திருக்கையில்␢ உம்மை நினைப்பேன்;␢ இரா விழிப்புகளில்␢ உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன்.⁾ 7⁽ஏனெனில், நீர் எனக்குத்␢ துணையாய் இருந்தீர்;␢ உம் இறக்கைகளின் நிழலில்␢ மகிழ்ந்து பாடுகின்றேன்.⁾ 8⁽நான் உம்மை உறுதியாகப்␢ பற்றிக்கொண்டேன்;␢ உமது வலக்கை␢ என்னை இறுகப் பிடித்துள்ளது.⁾ 9⁽என்னை அழித்துவிடத் தேடுவோர்␢ பூவுலகின் ஆழத்திற்குள் செல்வர்.⁾ 10⁽அவர்கள் வாளுக்கு இரையாவர்;␢ நரிகளுக்கு விருந்தாவர்.⁾ 11⁽அரசரோ கடவுளை நினைத்துக்␢ களிகூர்வார்;␢ அவர்மேல் ஆணையிட்டுக் கூறுவோர்␢ அனைவரும் பெருமிதம் கொள்வர்;␢ பொய் சொல்வோரின் வாய்␢ அடைக்கப்படும்.⁾