திருப்பாடல்கள் 148

முந்திய அடுத்த
1⁽அல்லேலூயா!␢ விண்ணுலகில் உள்ளவையே,␢ ஆண்டவரைப் போற்றுங்கள்;␢ உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள்.⁾ 2⁽அவருடைய தூதர்களே,␢ நீங்கள் யாவரும்␢ அவரைப் போற்றுங்கள்;␢ அவருடைய படைகளே,␢ நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்.⁾ 3⁽கதிரவனே, நிலாவே,␢ அவரைப் போற்றுங்கள்;␢ ஒளிவீசும் விண்மீன்களே,␢ அவரைப் போற்றுங்கள்.⁾ 4⁽விண்ணுலக வானங்களே,␢ அவரைப் போற்றுங்கள்;␢ வானங்களின் மேலுள்ள நீர்த்திரளே,␢ அவரைப் போற்றுங்கள்.⁾ 5⁽அவை ஆண்டவரின் பெயரைப்␢ போற்றட்டும்;␢ ஏனெனில், அவரது கட்டளையின்படி␢ எல்லாம் படைக்கப்பட்டன;⁾ 6⁽அவரே அவற்றை என்றென்றும்␢ நிலைபெறச் செய்தார்;␢ மாறாத நியமத்தை␢ அவற்றிற்கு ஏற்படுத்தினார்.⁾ 7⁽மண்ணுலகில்␢ ஆண்டவரைப் போற்றுங்கள்;␢ கடலின் பெரும் நாகங்களே,␢ ஆழ்கடல் பகுதிகளே,⁾ 8⁽நெருப்பே, கல்மழையே,␢ வெண்பனியே, மூடுபனியே,␢ அவரது ஆணையை நிறைவேற்றும்␢ பெருங்காற்றே,⁾ 9⁽மலைகளே, அனைத்துக் குன்றுகளே,␢ கனிதரும் மரங்களே,␢ அனைத்துக் கேதுரு மரங்களே,⁾ 10⁽காட்டு விலங்குகளே,␢ அனைத்துக் கால்நடைகளே,␢ ஊர்ந்து செல்லும் உயிரினங்களே,␢ சிறகுள்ள பறவைகளே,⁾ 11⁽உலகின் அரசர்களே,␢ எல்லா மக்களினங்களே,␢ தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே,⁾ 12⁽இளைஞரே, கன்னியரே,␢ முதியோரே மற்றும் சிறியோரே,␢ நீங்கள் எல்லாரும்␢ ஆண்டவரைப் போற்றுங்கள்.⁾ 13⁽அவர்கள் ஆண்டவரின் பெயரைப்␢ போற்றுவார்களாக;␢ அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது;␢ அவரது மாட்சி␢ விண்ணையும் மண்ணையும் கடந்தது.⁾ 14⁽அவர் தம் மக்களின் ஆற்றலை␢ உயர்வுறச் செய்தார்;␢ அவருடைய அனைத்து அடியாரும்␢ அவருக்கு நெருங்கிய␢ அன்பார்ந்த மக்களாகிய␢ இஸ்ரயேல் மக்களும்␢ அவரைப் போற்றுவார்கள்.␢ அல்லேலூயா!⁾