திருப்பாடல்கள் 114

முந்திய அடுத்த
1⁽எகிப்து நாட்டைவிட்டு␢ இஸ்ரயேலர்␢ வெளியேறியபொழுது,␢ வேற்று மொழி பேசிய மக்களை விட்டு␢ யாக்கோபின் குடும்பம் புறப்பட்டபொழுது,⁾ 2⁽யூதா அவருக்குத் தூயகம் ஆயிற்று;␢ இஸ்ரயேல் அவரது ஆட்சித்தளம் ஆனது.⁾ 3⁽செங்கடல் கண்டது;␢ ஓட்டம் பிடித்தது;␢ யோர்தான் பின்னோக்கிச் சென்றது.⁾ 4⁽மலைகள் செம்மறிக் கிடாய்கள் போலும்␢ குன்றுகள் ஆட்டுக்குட்டிகள் போலும்␢ துள்ளிக் குதித்தன.⁾ 5⁽கடலே! நீ விலகி ஓடும்படி␢ உனக்கு நேர்ந்தது என்ன?␢ யோர்தானே! நீ␢ பின்னோக்கிச் சென்றது ஏன்?⁾ 6⁽மலைகளே! நீங்கள்␢ செம்மறிக் கிடாய்கள்போல்␢ குதித்தது ஏன்?␢ குன்றுகளே!␢ நீங்கள் ஆட்டுக் குட்டிகள் போல்␢ துள்ளியது ஏன்?⁾ 7⁽பூவுலகே!␢ தலைவர் முன்னிலையில்␢ நடுநடுங்கு!␢ யாக்கோபின் கடவுள் முன்னிலையில்␢ நடுக்கமுறு!⁾ 8⁽அவர் பாறையைத்␢ தண்ணீர்த் தடாகம் ஆக்குகின்றார்;␢ கற்பாறையை வற்றாத␢ நீர்ச்சுனை ஆக்குகின்றார்.⁾