திருப்பாடல்கள் 30

முந்திய அடுத்த
1⁽ஆண்டவரே, உம்மை ஏத்திப்␢ புகழ்வேன்; ஏனெனில்,␢ நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்;␢ என்னைக் கண்டு என் பகைவர்␢ மகிழ நீர் விடவில்லை.⁾ 2⁽என் கடவுளாகிய ஆண்டவரே,␢ உம்மிடம் உதவி வேண்டினேன்;␢ என்னை நீர் குணப்படுத்துவீர்.⁾ 3⁽ஆண்டவரே, நீர் என்னைப்␢ பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்;␢ சாவுக்குழியில் இறங்கிய␢ எனது உயிரைக் காத்தீர்.⁾ 4⁽இறையன்பரே, ஆண்டவரைப்␢ புகழ்ந்து பாடுங்கள்;␢ தூயவராம் அவரை நினைந்து␢ நன்றி கூறுங்கள்.⁾ 5⁽அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான்␢ இருக்கும்; அவரது கருணையோ␢ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்;␢ மாலையில் அழுகை;␢ காலையிலோ ஆர்ப்பரிப்பு.⁾ 6⁽நான் வளமுடன் வாழ்ந்தபோது,␢ ‛என்னை ஒருபோதும்␢ அசைக்க முடியாது’ என்றேன்.⁾ 7⁽ஆனால், ஆண்டவரே!␢ உமது கருணையினால்␢ மலையென உறுதியாக என்னை␢ நிலைநிற்கச் செய்தீர்;␢ உம் முகத்தை மறைத்துக்கொண்டீர்;␢ நான் நிலைகலங்கிப் போனேன்.⁾ 8⁽ஆண்டவரே, உம்மை நோக்கி␢ மன்றாடினேன்;␢ என் தலைவரிடம்␢ எனக்கு இரங்குமாறு வேண்டினேன்.⁾ 9⁽நான் சாவதால், படுகுழிக்குப் போவதால்,␢ உமக்கு என்ன பயன்?␢ புழுதியால் உம்மைப் புகழ முடியுமா?␢ உமது வாக்குப் பிறழாமையை␢ அறிவிக்க இயலுமா?⁾ 10⁽ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்;␢ என்மீது இரங்கும்;␢ ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.⁾ 11⁽நீர் என் புலம்பலைக்␢ களிநடனமாக மாற்றிவிட்டீர்;␢ என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு␢ எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்.⁾ 12⁽ஆகவே என் உள்ளம்*␢ உம்மைப் புகழ்ந்து பாடும்;␢ மௌனமாய் இராது;␢ என் கடவுளாகிய ஆண்டவரே,␢ உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.⁾