திருப்பாடல்கள் 7

முந்திய அடுத்த
1⁽என் கடவுளாகிய ஆண்டவரே,␢ உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்;␢ என்னைத் துரத்துவோர் அனைவரிடமிருந்தும்␢ என்னைக் காப்பாற்றித் தப்புவியும்.⁾ 2⁽இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல § என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்;␢ விடுவிப்போர் எவரும் இரார்.⁾ 3⁽என் கடவுளாகிய ஆண்டவரே,␢ நான் இவற்றைச் செய்திருந்தால் –␢ என் கை தவறிழைத்திருந்தால்,⁾ 4⁽என்னோடு நல்லுறவு கொண்டிருந்தவனுக்கு␢ நான் தீங்கிழைத்திருந்தால்,␢ என் பகைவனைக் காரணமின்றிக்␢ காட்டிக்கொடுத்திருந்தால் –⁾ 5⁽எதிரி என்னைத் துரத்திப் பிடிக்கட்டும்;␢ என்னைத் தரையில் தள்ளி␢ மிதித்து நசுக்கட்டும்;␢ என் பெருமையைப் புழுதியில்␢ புதைக்கட்டும். (சேலா)⁾ 6⁽ஆண்டவரே, சினங்கொண்டு␢ எழுந்தருளும்;␢ என் பகைவரின் சீற்றத்தை␢ அடக்க வாரும்;␢ எனக்காக விழித்தெழும்;␢ ஏனெனில், நீதியை நிலைநாட்டுபவர்␢ நீர் ஒருவரே.⁾ 7⁽எல்லா இனத்தாரும் ஒன்றுகூடி␢ உம்மைச் சூழச் செய்யும்;␢ அவர்கள்மீது உயரத்தினின்று␢ ஆட்சி செலுத்தும்.⁾ 8⁽ஆண்டவரே, நீரே மக்களினத்தார்␢ அனைவருக்கும் நீதி வழங்குபவர்;␢ ஆண்டவரே, என் நேர்மைக்கும்␢ வாய்மைக்கும் ஏற்ப␢ எனக்குத் தீர்ப்பளியும்.⁾ 9⁽பொல்லாரின் தீமையை␢ முடிவுக்குக் கொண்டுவாரும்;␢ நல்லாரை நிலைநிறுத்தும்;␢ நீர் எண்ணங்களையும்␢ விருப்பங்களையும் கண்டறிபவர்;␢ நீதி அருளும் கடவுள்.⁾ 10⁽கடவுளே என் கேடயம்;␢ நேரிய உளத்தோரை␢ அவர் விடுவிப்பார்.⁾ 11⁽கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி;␢ நாள்தோறும் அநீதியைப்␢ பொறுத்துக் கொள்ளாத இறைவன்.⁾ 12⁽பொல்லார் மனமாற்றம் அடையாவிடில்,␢ அவர் தம் வாளைக் கூர்மையாக்குவார்;␢ வில்லை நாணேற்றி ஆயத்தம் செய்வார்.⁾ 13⁽கொலைக் கருவிகளை ஆயத்தமாக்குவார்;␢ அம்புகளை அனல் பறக்கும்படி எய்வார்;⁾ 14⁽ஏனெனில், பொல்லார்␢ கொடுமையைக் கருக்கொள்கின்றனர்;␢ அவர்கள் தீவினையைக் கருத்தாங்கி,␢ பொய்மையைப் பெற்றெடுக்கின்றனர்.⁾ 15⁽அவர்கள் குழியை வெட்டி␢ ஆழமாகத் தோண்டுகின்றனர்;␢ அவர்கள் வெட்டிய குழியில்␢ அவர்களே விழுகின்றனர்;⁾ 16⁽அவர்கள் செய்த கேடு␢ அவர்கள் தலைக்கே திரும்பும்.␢ அவர்கள் செய்த கொடுமை␢ அவர்கள் உச்சந்தலையிலேயே விழும்.⁾ 17⁽ஆண்டவர் வழங்கிய நீதிக்காக␢ அவருக்கு நன்றி கூறுவேன்;␢ உன்னதரான ஆண்டவரின் பெயரைப்␢ போற்றிப் பாடுவேன்.⁾