திருப்பாடல்கள் 132

முந்திய அடுத்த
1⁽ஆண்டவரே! தாவீதையும்␢ அவர் பட்ட␢ இன்னல்கள் அனைத்தையும்␢ நினைவு கூர்ந்தருளும்.⁾ 2⁽அவர் ஆண்டவராகிய உமக்கு␢ ஆணையிட்டுக் கூறியதை,␢ யாக்கோபின் வல்லவராகிய␢ உமக்குச் செய்த பொருத்தனையை␢ நினைவுகூர்ந்தருளும்.⁾ 3⁽“ஆண்டவருக்கு ஓர் இடத்தை,␢ யாக்கோபின் வல்லவருக்கு␢ ஒர் உறைவிடத்தை␢ நான் அமைக்கும் வரையில்,⁾ 4⁽என் இல்லமாகிய கூடாரத்தினுள்␢ செல்லமாட்டேன்;␢ படுப்பதற்காக என் மஞ்சத்தில்␢ ஏறமாட்டேன்;⁾ 5⁽என் கண்களைத் தூங்க விடமாட்டேன்;␢ என் இமைகளை மூடவிடமாட்டேன்”␢ என்று அவர் சொன்னாரே.⁾ 6⁽திருப்பேழை எப்ராத்தாவில்␢ இருப்பதாய்க் கேள்விப்பட்டோம்;␢ வனவெளியில் அதைக் கண்டுபிடித்தோம்.⁾ 7⁽“அவரது உறைவிடத்திற்குச் செல்வோம்!␢ வாருங்கள்;␢ அவரது திருவடிதாங்கி␢ முன் வீழ்ந்து பணிவோம்!” என்றோம்.⁾ 8⁽ஆண்டவரே! நீர் உமது␢ வல்லமை விளங்கும் பேழையுடன்␢ உமது உறைவிடத்திற்கு␢ எழுந்தருள்வீராக!⁾ 9⁽உம் குருக்கள் நீதியை␢ ஆடையென அணிவார்களாக!␢ உம் அன்பர்கள் அக்களிப்பார்களாக!⁾ 10⁽நீர் திருப்பொழிவு செய்த அரசரை,␢ உம் ஊழியராகிய தாவீதின் பொருட்டுப்␢ புறக்கணியாதேயும்.⁾ 11⁽ஆண்டவர் தாவீதுக்கு␢ உண்மையாய் ஆணையிட்டுக் கூறினார்;␢ அவர்தம் வாக்குறுதியினின்று␢ பின்வாங்கமாட்டார்;␢ “உனக்குப் பிறந்த ஒருவனை␢ அரசனாக ஏற்படுத்தி␢ உன் அரியணையில்␢ வீற்றிருக்கச் செய்வேன்.⁾ 12⁽உன் மைந்தர்␢ என் உடன்படிக்கையையும்,␢ நான் அவர்களுக்குக் கற்பிக்கும்␢ என் நியமங்களையும் கடைப்பிடித்தால்,␢ அவர்களுடைய மைந்தரும்␢ என்றென்றும் உன் அரியணையில்␢ வீற்றிருப்பர்.”⁾ 13⁽ஆண்டவர் சீயோனைத்␢ தேர்ந்தெடுத்தார்;␢ அதையே தம்␢ உறைவிடமாக்க விரும்பினார்.⁾ 14⁽“இது என்றென்றும்␢ நான் இளைப்பாறும் இடம்;␢ இதை நான் விரும்பினதால்␢ இதையே என் உறைவிடமாக்குவேன்.⁾ 15⁽இங்கே என் ஆசியால்␢ உணவுப் பொருள்␢ தாராளமாகக் கிடைக்கச்செய்வேன்;␢ அதனை ஏழைகள் உண்டு␢ நிறைவு பெறுமாறு செய்வேன்.⁾ 16⁽இங்குள்ள குருக்களுக்கு␢ மீட்பெனும் உடையை உடுத்துவேன்;␢ இங்குள்ள என் அன்பர்கள்␢ மகிழ்ந்து ஆரவாரிப்பார்கள்.⁾ 17⁽இங்கே தாவீதின் மரபிலிருந்து␢ ஒரு வல்லவனை எழச்செய்வேன்;␢ நான் திருப்பொழிவு செய்தவனுக்காக␢ ஒரு ஒளிவிளக்கை ஏற்பாடு செய்துள்ளேன்.⁾ 18⁽அவனுடைய எதிரிகளுக்கு␢ இகழ்ச்சியெனும்␢ உடையை உடுத்துவேன்;␢ அவன்மீதோ அவனது மணிமுடி␢ ஒளிவீசும்.”⁾