திருப்பாடல்கள் 131

முந்திய அடுத்த
1⁽ஆண்டவரே! என் உள்ளத்தில்␢ இறுமாப்பு இல்லை!␢ என் பார்வையில் செருக்கு இல்லை;␢ எனக்கு மிஞ்சின அரிய, பெரிய,␢ செயல்களில் நான் ஈடுபடுவதில்லை.⁾ 2⁽மாறாக, என் நெஞ்சம்␢ நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது;␢ தாய்மடி தவழும் குழந்தையென␢ என் நெஞ்சம் என்னகத்தே␢ அமைதியாயுள்ளது.⁾ 3⁽இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும்␢ ஆண்டவரையே நம்பியிரு!⁾