திருப்பாடல்கள் 46

முந்திய அடுத்த
1⁽கடவுள் நமக்கு அடைக்கலமும்␢ ஆற்றலுமாய் உள்ளார்;␢ இடுக்கணுற்ற வேளைகளில்␢ நமக்கு உற்ற துணையும் அவரே.⁾ 2⁽ஆகையால், நிலவுலகம்␢ நிலைகுலைந்தாலும்,␢ மலைகள் ஆழ்கடலில்␢ அதிர்ந்து நடுங்கினாலும்,⁾ 3⁽கடலின் அலைகள் கொந்தளித்துப்␢ பொங்கினாலும், அவற்றின் பெருக்கால்␢ குன்றுகள் அதிர்ந்து நடுங்கினாலும்␢ எங்களுக்கு அச்சமென்பதே இல்லை. (சேலா)⁾ 4⁽ஆறு ஒன்று உண்டு,␢ அதன் கால்வாய்கள்␢ உன்னதரான கடவுளின்␢ திரு உறைவிடமான நகருக்குப்␢ பேரின்பம் அளிக்கின்றன.⁾ 5⁽அந்நகரின் நடுவில்␢ கடவுள் இருக்கின்றார்;␢ அது ஒருபோதும் நிலைகுலையாது;␢ வைகறைதோறும் கடவுள் துணை␢ அதற்கு உண்டு.⁾ 6⁽வேற்றினத்தார் கலக்கமுற்றனர்;␢ அரசுகள் ஆட்டம் கண்டன;␢ கடவுளின் குரல் முழங்கிற்று;␢ பூவுலகம் கரைந்தது.⁾ 7⁽படைகளின் ஆண்டவர்␢ நம்மோடு இருக்கின்றார்;␢ யாக்கோபின் கடவுளே␢ நமக்கு அரண். (சேலா)⁾ 8⁽வாரீர்! ஆண்டவரின்␢ செயல்களைக் காணீர்!␢ அவர் உலகில் ஆற்றியுள்ள␢ திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்!⁾ 9⁽உலகின் கடையெல்லைவரை␢ போர்களைத் தடுத்து நிறுத்துகின்றார்;␢ வில்லை ஒடிக்கின்றார்;␢ ஈட்டியை முறிக்கின்றார்.␢ தேர்களைத் தீக்கு இரையாக்குகின்றார்.⁾ 10⁽அமைதி கொண்டு, நானே கடவுள் என␢ உணர்ந்து கொள்ளுங்கள்;␢ வேற்றினத்தாரிடையே நான்␢ உயர்ந்திருப்பேன்; பூவுலகில்␢ நானே மாட்சியுடன் விளங்குவேன்.⁾ 11⁽படைகளின் ஆண்டவர்␢ நம்மோடு இருக்கின்றார்;␢ யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். (சேலா)⁾