திருப்பாடல்கள் 61

முந்திய அடுத்த
1⁽கடவுளே! என் கூக்குரலைக்␢ கேளும்; என்␢ விண்ணப்பத்திற்குச் செவிசாயும்.⁾ 2⁽பூவுலகின் கடைமுனையினின்று␢ உம்மைக் கூப்பிடுகின்றேன்;␢ என் உள்ளம் சோர்வுற்றிருக்கின்றது;␢ உயரமான குன்றுக்கு § என்னை அழைத்துச் செல்லும்.⁾ 3⁽ஏனெனில் நீரே என் புகலிடம்;␢ எதிரியின்முன் வலிமையான கோட்டை.⁾ 4⁽நான் உமது கூடாரத்தில்␢ எந்நேரமும் தங்கியிருப்பேன்;␢ உமது இறக்கைகளின் பாதுகாப்பில்␢ தஞ்சம் புகுவேன். (சேலா)⁾ 5⁽ஏனெனில், கடவுளே!␢ நான் செய்த பொருத்தனைகளை␢ நீர் அறிவீர்;␢ உமது பெயருக்கு அஞ்சுவோர்க்குரிய␢ உடைமையை எனக்குத் தந்தீர்.⁾ 6⁽அரசரைப் பல்லாண்டு வாழச் செய்யும்;␢ அவரது ஆயுள்␢ தலைமுறை தலைமுறையாக நீடிக்கட்டும்!⁾ 7⁽கடவுள் முன்னிலையில் அவர்␢ என்றென்றும் வீற்றிருப்பாராக!␢ பேரன்போடும் உண்மையோடும்␢ அவரைக் காத்தருளும்!⁾ 8⁽உமது பெயரை என்றென்றும்␢ புகழ்ந்து பாடுவேன்;␢ நாள்தோறும் என் பொருத்தனைகளை␢ நிறைவேற்றுவேன்.⁾