1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
1⁽ஆண்டவருக்கு␢ நன்றி செலுத்துங்கள்!␢ அவர்தம் பெயரைச்␢ சொல்லி வழிபடுங்கள்!␢ அவர்தம் செயல்களை␢ மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.⁾
2⁽அவருக்குப் பாடல் பாடுங்கள்;␢ அவரைப் புகழ்ந்தேத்துங்கள்!␢ அவர்தம் வியத்தகு செயல்கள்␢ அனைத்தையும் எடுத்துரையுங்கள்!⁾
3⁽அவர்தம் திருப்பெயரை␢ மாட்சிப்படுத்துங்கள்;␢ ஆண்டவரைத் தேடுவோரின் இதயம்␢ அக்களிப்பதாக!⁾
4⁽ஆண்டவரையும்␢ அவரது ஆற்றலையும் தேடுங்கள்!␢ அவரது திருமுகத்தை␢ இடையறாது நாடுங்கள்!⁾
5⁽அவர் செய்த வியத்தகு செயல்களை␢ நினைவு கூருங்கள்!␢ அவர்தம் அருஞ்செயல்களையும்,␢ அவரது வாய் மொழிந்த␢ நீதித் தீர்ப்புகளையும்␢ நினைவில் கொள்ளுங்கள்.⁾
6⁽அவரின் ஊழியராம்␢ ஆபிரகாமின் வழிமரபே!␢ அவர் தேர்ந்துகொண்ட␢ யாக்கோபின் பிள்ளைகளே!⁾
7⁽அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்!␢ அவரின் நீதித்தீர்ப்புகள்␢ உலகம் அனைத்திற்கும் உரியன.⁾
8⁽அவர் தமது உடன்படிக்கையை␢ என்றென்றும் நினைவில் கொள்கின்றார்;␢ ஆயிரம் தலைமுறைக்கென␢ தாம் அளித்த வாக்குறுதியை␢ நினைவுகூர்கின்றார்.⁾
9⁽ஆபிரகாமுடன் தாம் செய்து கொண்ட␢ உடன்படிக்கையையும்␢ ஈசாக்குக்குத் தாம்␢ ஆணையிட்டுக் கூறியதையும்␢ அவர் நினைவில் கொண்டுள்ளார்.⁾
10⁽யாக்கோபுக்கு நியமமாகவும்␢ இஸ்ரயேலுக்கு␢ என்றுமுள உடன்படிக்கையாகவும்␢ அதை அவர் உறுதிப்படுத்தினார்.⁾
11⁽‘கானான் நாட்டை␢ உங்களுக்கு அளிப்பேன்;␢ அப்பங்கே உங்களுக்கு␢ உரிமைச் சொத்தாய் இருக்கும்’␢ என்றார் அவர்.⁾
12⁽அப்போது, அவர்கள்␢ மதிப்பிலும் எண்ணிக்கையிலும்␢ குறைந்தவராய் இருந்தார்கள்;␢ அங்கே அவர்கள்␢ அன்னியராய் இருந்தார்கள்.⁾
13⁽அவர்கள் ஒரு நாட்டினின்று␢ மற்றொரு நாட்டிற்கும்␢ ஓர் அரசினின்று மற்றொரு மக்களிடமும்␢ அலைந்து திரிந்தார்கள்.⁾
14⁽யாரும் அவர்களை ஒடுக்குமாறு␢ அவர் விட்டு விடவில்லை;␢ அவர்களின் பொருட்டு மன்னர்களை␢ அவர் கண்டித்தார்.⁾
15⁽‘நான் அருள்பொழிவு செய்தாரைத்␢ தொடாதீர்!␢ என் இறைவாக்கினர்க்குத்␢ தீங்கிழைக்காதீர்’ என்றார் அவர்.⁾
16⁽நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்;␢ உணவெனும் ஊன்றுகோலை␢ முறித்துவிட்டார்.⁾
17⁽அவர்களுக்கு முன் ஒருவரை␢ அனுப்பிவைத்தார்;␢ யோசேப்பு என்பவர்␢ அடிமையாக விற்கப்பட்டார்.⁾
18⁽அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு␢ அவரைத் துன்புறுத்தினர்.␢ அவர்தம் கழுத்தில்␢ இரும்புப் பட்டையை மாட்டினர்.⁾
19⁽காலம் வந்தது;␢ அவர் உரைத்தது நிறைவேறிற்று;␢ ஆண்டவரின் வார்த்தை␢ அவர் உண்மையானவரென மெய்ப்பித்தது.⁾
20⁽மன்னர் ஆளனுப்பி␢ அவரை விடுதலை செய்தார்;␢ மக்களினங்களின் தலைவர்␢ அவருக்கு விடுதலை அளித்தார்;⁾
21⁽அவர் அவரைத் தம் அரண்மனைக்குத்␢ தலைவர் ஆக்கினார்;␢ தம் உடைமைகளுக்கெல்லாம்␢ பொறுப்பாளராக ஏற்படுத்தினார்.⁾
22⁽அவர் அரச அலுவலரைப் பயிற்றுவித்தார்;␢ அவருடைய அவைப்பெரியோருக்கு␢ நல்லறிவு புகட்டினார்.⁾
23⁽பின்னர், இஸ்ரயேல் எகிப்துக்கு வந்தார்;␢ யாக்கோபு காம் நாட்டில்␢ அன்னியராய் வாழ்ந்தார்.⁾
24⁽ஆண்டவர் தம் மக்களைப்␢ பல்கிப் பெருகச் செய்தார்;␢ அவர்களின் எதிரிகளைவிட அவர்களை␢ வலிமைமிக்கவர்கள் ஆக்கினார்.⁾
25⁽தம் மக்களை வெறுக்கும்படியும்,␢ தம் அடியார்களுக்கு எதிராகச்␢ சூழ்ச்சி செய்யும்படியும்␢ அவர் எகிப்தியரின் மனத்தை மாற்றினார்.⁾
26⁽அவர்தம் ஊழியராகிய மோசேயையும்,␢ தாம் தேர்ந்தெடுத்த␢ ஆரோனையும் அனுப்பினார்.⁾
27⁽அவர்கள் எகிப்தியரிடையே␢ அவர்தம் அருஞ்செயல்களைச் செய்தனர்;␢ காம் நாட்டில் வியத்தகு செயல்களைச்␢ செய்து காட்டினர்.⁾
28⁽அவர் இருளை அனுப்பி␢ நாட்டை இருட்டாக்கினார்;␢ அவருடைய சொற்களை␢ எதிர்ப்பார் இல்லை.⁾
29⁽அவர்களுடைய நீர்நிலைகளை␢ அவர் இரத்தமாக மாற்றினார்;␢ அவற்றிலிருந்த மீன்களைச் சாகடித்தார்.⁾
30⁽அவர்களது நாட்டிற்குள்␢ தவளைகள் ஏறிவந்தன;␢ மன்னர்களின் பள்ளியறைகளுக்குள்ளும்␢ அவை நுழைந்தன.⁾
31⁽அவர் கட்டளையிட,␢ அவர்களுடைய நாடு முழுவதிலும்␢ ஈக்களும் கொசுக்களும் திரண்டு வந்தன.⁾
32⁽அவர் நீருக்குப் பதிலாகக்␢ கல்லை மழையாகப் பொழிந்தார்;␢ அவர்களது நாடெங்கும்␢ மின்னல் தெறிக்கச் செய்தார்.⁾
33⁽அவர் அவர்களின்␢ திராட்சைச் செடிகளையும்␢ அத்திமரங்களையும் அழித்தார்;␢ அவர்களது நாடெங்குமுள்ள␢ மரங்களை முறித்தார்.⁾
34⁽அவரது சொல்லால் வெட்டுக் கிளிகளும்␢ எண்ணற்ற வெட்டுப்புழுக்களும்␢ அங்கே தோன்றின.⁾
35⁽அவை அவர்களது நாட்டின்␢ பயிர் பச்சைகளைத் தின்றுத்தீர்த்தன;␢ அவர்களது நிலத்தின் விளைச்சல்களை␢ விழுங்கிவிட்டன.⁾
36⁽அவர் அவர்களது நாட்டின்␢ தலைப்பேறுகள் அனைத்தையும்␢ தாக்கினார்; அவர்களது␢ ஆண்மையின் முதற்பேறுகள்␢ அனைத்தையும் வீழ்த்தினார்.⁾
37⁽அவர் இஸ்ரயேலரை␢ வெள்ளியோடும் பொன்னோடும்␢ புறப்படச் செய்தார்;␢ அவர்கள் குலங்களில் எவரும்␢ தளர்ந்து போகவில்லை.⁾
38⁽அவர்கள் வெளியேறுகையில்␢ எகிப்தியர் அகமகிழ்ந்தனர்;␢ ஏனெனில், இஸ்ரயேலர் பற்றிய பேரச்சம்␢ அவர்களை ஆட்கொண்டிருந்தது.⁾
39⁽அவர் அவர்களைப் பாதுகாக்க␢ மேகத்தைப் பரப்பினார்;␢ இரவில் ஒளிதர நெருப்பைத் தந்தார்.⁾
40⁽அவர்கள் கேட்டதால்␢ அவர் காடைகளை வரச்செய்தார்;␢ வானினின்று வந்த உணவால்␢ அவர்களை நிறைவுறச் செய்தார்.⁾
41⁽அவர் கற்பாறையைப் பிளந்தார்;␢ தண்ணீர் பொங்கி வழிந்தது;␢ அது பாலைநிலங்களில் ஆறாய் ஓடிற்று.⁾
42⁽ஏனெனில், தம் அடியார்␢ ஆபிரகாமுக்கு அளித்த␢ தமது தூய வாக்குறுதியை␢ அவர் நினைவுகூர்ந்தார்.⁾
43⁽அவர் தம் மக்களை␢ மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்;␢ அவர்தாம் தெரிந்தெடுத்தவர்களை␢ ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார்.⁾
44⁽அவர் வேற்றினத்தாரின் நாடுகளை␢ அவர்களுக்கு அளித்தார்;␢ மக்களினங்களது உழைப்பின் பயனை␢ அவர்கள் உரிமையாக்கிக்␢ கொள்ளுமாறு செய்தார்.⁾
45⁽அவர்கள் அவருடைய␢ கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும்,␢ அவருடைய சட்டங்களின்படி ஒழுகவுமே␢ அவர் இவ்வாறு செய்தார். அல்லேலூயா!⁾