திருப்பாடல்கள் 42

முந்திய அடுத்த
1⁽கலைமான் நீரோடைகளுக்காக␢ ஏங்கித் தவிப்பது போல்␢ கடவுளே! என் நெஞ்சம்␢ உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.⁾ 2⁽என் நெஞ்சம் கடவுள்மீது,␢ உயிருள்ள இறைவன்மீது␢ தாகம் கொண்டுள்ளது;␢ எப்பொழுது நான்␢ கடவுள் முன்னிலையில் வந்து␢ நிற்கப்போகின்றேன்?⁾ 3⁽இரவும் பகலும் என் கண்ணீரே␢ எனக்கு உணவாயிற்று;␢ ‛உன் கடவுள் எங்கே?’ என்று␢ என்னிடம் *தீயோர் கேட்கின்றனர்.*⁾ 4⁽மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக்␢ கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே!␢ ஆர்ப்பரிப்பும் நன்றிப்பாடல்களும் முழங்க␢ விழாக்கூட்டத்தில் நடந்தேனே!␢ இவற்றையெல்லாம் நான் நினைக்கும்போது,␢ என் உள்ளம் வெகுவாய் வெதும்புகின்றது.⁾ 5⁽என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்?␢ நீ கலக்கமுறுவது ஏன்? § கடவுளையே நம்பியிரு;␢ என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு␢ இன்னும் நான் அவருக்கு␢ நன்றி செலுத்துவேன்.⁾ 6⁽என் நெஞ்சம் மிகவும் தளர்ந்துள்ளது;␢ ஆகவே யோர்தான் நிலப்பகுதியிலும்,␢ எர்மோன், மீசார் மலைப்பகுதிகளிலும்␢ உம்மை நான் நினைத்துக் கொண்டேன்.⁾ 7⁽உம் அருவிகள் இடியென முழங்கிட␢ ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கின்றது;␢ உம் சிற்றலைகளும் பேரலைகளும்␢ என்மீது புரண்டோடுகின்றன.⁾ 8⁽நாள்தோறும் ஆண்டவர் தமது␢ பேரன்பைப் பொழிகின்றார்;␢ இரவுதோறும் நான் அவரைப் பாடுவேன்;␢ எனக்கு வாழ்வளிக்கும்␢ இறைவனை நோக்கி மன்றாடுவேன்.⁾ 9⁽என் கற்பாறையாகிய இறைவனிடம்␢ ‛ஏன் என்னை மறந்தீர்;␢ எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன்␢ துயருடன் நடமாட வேண்டும்’ என்கின்றேன்.⁾ 10⁽‛உன் கடவுள் எங்கே?’ என்று␢ என் பகைவர் நாள்தோறும்␢ என்னைக் கேட்பது,␢ என் எலும்புகளை ஊடுருவும் வாள்போல␢ என்னைத் தாக்குகின்றது.⁾ 11⁽என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்?␢ நீ கலக்கமுறுவது ஏன்?␢ கடவுளையே நம்பியிரு.␢ என் மீட்பராம் கடவுளை␢ இன்னும் நான் போற்றுவேன். § என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு␢ இன்னும் நான் அவருக்கு␢ நன்றி செலுத்துவேன்.⁾