திருப்பாடல்கள் 51

முந்திய அடுத்த
1⁽கடவுளே! உமது பேரன்புகேற்ப␢ எனக்கு இரங்கும்;␢ உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப␢ என் குற்றங்களைத் துடைத்தருளும்.⁾ 2⁽என் தீவினை முற்றிலும் நீங்கும்படி␢ என்னைக் கழுவியருளும்;␢ என் பாவம் அற்றுப்போகும்படி␢ என்னைத் தூய்மைப்படுத்தியருளும்;⁾ 3⁽ஏனெனில், என் குற்றங்களை␢ நான் உணர்கின்றேன்;␢ என் பாவம் எப்போதும்␢ என் மனக்கண்முன் நிற்கின்றது.⁾ 4⁽உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்;␢ உம் பார்வையில் தீயது செய்தேன்;␢ எனவே, உம் தீர்ப்பினால்␢ உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்;␢ உம் தண்டனைத் தீர்ப்பில்␢ நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.⁾ 5⁽இதோ! தீவினையோடு␢ என் வாழ்வைத் தொடங்கினேன்;␢ பாவத்தோடே என் அன்னை␢ என்னைக் கருத்தாங்கினாள்.⁾ 6⁽இதோ! நீர் விரும்புவது␢ உள்ளத்து உண்மையையே;␢ மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும்.⁾ 7⁽ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்;␢ நான் தூய்மையாவேன்.␢ என்னைக் கழுவியருளும்;␢ உறைபனியிலும் வெண்மையாவேன்.⁾ 8⁽மகிழ்வொலியும் களிப்போசையும்␢ நான் கேட்கும்படி செய்யும்;␢ நீர் நொறுக்கிய என் எலும்புகள்␢ களிகூர்வனவாக!⁾ 9⁽என் பாவங்களைப் பாராதபடி␢ உம்முகத்தை மறைத்துக்கொள்ளும்;␢ என் பாவக்கறைகளை எல்லாம்␢ துடைத்தருளும்.⁾ 10⁽கடவுளே! தூயதோர் உள்ளத்தை␢ என்னுள்ளே படைத்தருளும்;␢ உறுதிதரும் ஆவியை,␢ புதுப்பிக்கும் ஆவியை,␢ என்னுள்ளே உருவாக்கியருளும்.⁾ 11⁽உமது முன்னிலையிலிருந்து␢ என்னைத் தள்ளிவிடாதேயும்;␢ உமது தூய ஆவியை␢ என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.⁾ 12⁽உம் மீட்பின் மகிழ்ச்சியை␢ மீண்டும் எனக்கு அளித்தருளும்;␢ தன்னார்வ மனம் தந்து␢ என்னைத் தாங்கியருளும்.⁾ 13⁽அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு␢ உம் வழிகளைக் கற்பிப்பேன்;␢ பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்.⁾ 14⁽கடவுளே! எனது மீட்பின் கடவுளே!␢ இரத்தப் பழியினின்று␢ என்னை விடுவித்தருளும்;␢ அப்பொழுது, என் நா␢ உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.⁾ 15⁽என் தலைவரே!␢ என் இதழ்களைத் திறந்தருளும்;␢ அப்பொழுது, என் வாய்␢ உமக்குப் புகழ் சாற்றிடும்.⁾ 16⁽ஏனெனில், பலியினால்␢ உம்மை மகிழ்விக்க முடியாது;␢ நான் எரிபலி செலுத்தினாலும்␢ நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.⁾ 17⁽கடவுளுக்கேற்ற பலி␢ நொறுங்கிய நெஞ்சமே;␢ கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த␢ உளத்தை நீர் அவமதிப்பதில்லை.⁾ 18⁽சீயோனுக்கு இன்முகம் காட்டி␢ நன்மை செய்யும்;␢ எருசலேமின் மதில்களை␢ மீண்டும் கட்டுவீராக!⁾ 19⁽அப்பொழுது, எரிபலி, முழு எரிபலியெனும்␢ முறையான பலிகளை விரும்புவீர்;␢ மேலும், இளங்காளைகள் உமது பீடத்தில்␢ பலியாகச் செலுத்தப்படும்.⁾