திருப்பாடல்கள் 84

முந்திய அடுத்த
1⁽படைகளின் ஆண்டவரே!␢ உமது உறைவிடம் எத்துணை␢ அருமையானது!⁾ 2⁽என் ஆன்மா ஆண்டவரின்␢ கோவில் முற்றங்களுக்காக␢ ஏங்கித் தவிக்கின்றது;␢ என் உள்ளமும் உடலும்␢ என்றுமுள இறைவனை␢ மகிழ்ச்சியுடன் பாடுகின்றது.⁾ 3⁽படைகளின் ஆண்டவரே!␢ என் அரசரே! என் கடவுளே!␢ உமது பீடங்களில்␢ அடைக்கலான் குருவிக்கு␢ வீடு கிடைத்துள்ளது;␢ தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச்␢ சிட்டுக் குருவிகளுக்குக்␢ கூடும் கிடைத்துள்ளது.⁾ 4⁽உமது இல்லத்தில் தங்கியிருப்போர்␢ நற்பேறு பெற்றோர்;␢ அவர்கள் எந்நாளும் உம்மைப்␢ புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். (சேலா)⁾ 5⁽உம்மிடருந்து வலிமை பெற்ற மானிடர்␢ பேறு பெற்றோர்;␢ அவர்களது உள்ளம் § சீயோனுக்குச் செல்லும்␢ நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது.⁾ 6⁽வறண்ட ‛பாக்கா’ பள்ளத்தாக்கை␢ அவர்கள் கடந்து செல்கையில்,␢ அது நீருற்றுகள் உள்ள இடமாக␢ மாறுகின்றது;␢ முதல் பருவமழை அதனை␢ நீர்நிலைகள் நிறைந்த இடமாக்கும்.⁾ 7⁽அவர்கள் நடந்து செல்கையில்␢ மேலும் மேலும்␢ வலிமை பெறுகின்றார்கள்;␢ பின்பு, சீயோனின் தெய்வங்களின்␢ இறைவனைக் காண்பார்கள்.⁾ 8⁽படைகளின் ஆண்டவரே,␢ என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்!␢ யாக்கோபின் கடவுளே,␢ எனக்குச் செவிசாய்த்தருளும்! (சேலா)⁾ 9⁽எங்கள் கேடயமாகிய கடவுளே,␢ கண்ணோக்கும்!␢ நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக்␢ கனிவுடன் பாரும்!⁾ 10⁽வேற்றிடங்களில் வாழும்␢ ஆயிரம் நாள்களினும்␢ உம் கோவில் முற்றங்களில் தங்கும்␢ ஒருநாளே மேலானது;␢ பொல்லாரின் கூடாரங்களில்␢ குடியிருப்பதினும்,␢ என் கடவுளது இல்லத்தின்␢ வாயிற்காவலனாய் இருப்பதே␢ இனிமையானது.⁾ 11⁽ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர்␢ நமக்குத் கதிரவனும்␢ கேடயமுமாய் இருக்கின்றார்;␢ ஆண்டவர் அருளையும்␢ மேன்மையையும் அளிப்பார்;␢ மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு␢ நன்மையானவற்றை வழங்குவார்.⁾ 12⁽படைகளின் ஆண்டவரே!␢ உம்மை நம்பும் மானிடர்␢ நற்பேறு பெற்றோர்!⁾