திருப்பாடல்கள் 124

முந்திய அடுத்த
1⁽ஆண்டவர் நம் சார்பாக␢ இருந்திராவிடில் –␢ இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக!⁾ 2⁽ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில்,␢ நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,⁾ 3⁽அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது,␢ அவர்கள் நம்மை␢ உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.⁾ 4⁽அப்பொழுது, வெள்ளம்␢ நம்மை மூழ்கடித்திருக்கும்;␢ பெருவெள்ளம் நம்மீது␢ புரண்டோடியிருக்கும்;⁾ 5⁽கொந்தளிக்கும் வெள்ளம்␢ நம்மீது பாய்ந்தோடியிருக்கும்.⁾ 6⁽ஆண்டவர் போற்றி! போற்றி!␢ எதிரிகளின் பற்களுக்கு␢ அவர் நம்மை இரையாக்கவில்லை.⁾ 7⁽வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த␢ பறவைபோல் ஆனோம்;␢ கண்ணி அறுந்தது;␢ நாம் தப்பிப் பிழைத்தோம்.⁾ 8⁽ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை!␢ விண்ணையும் மண்ணையும்␢ உண்டாக்கியவர் அவரே!⁾