1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
1⁽ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச்␢ செவிசாய்த்தருளும்;␢ என் பெருமூச்சைக் கவனித்தருளும்.⁾
2⁽என் அரசரே, என் கடவுளே,␢ என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும்;␢ ஏனெனில் நான் உம்மை நோக்கியே␢ மன்றாடுகின்றேன்.⁾
3⁽ஆண்டவரே, விடியற்காலையில்␢ என் குரலைக் கேட்டருளும்;␢ வைகறையில் உமக்காக வழிமேல்␢ விழிவைத்துக் காத்திருப்பேன்.⁾
4⁽ஏனெனில், நீர் பொல்லாங்கைப் பார்த்து␢ மகிழும் இறைவன் இல்லை;␢ உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.⁾
5⁽ஆணவமிக்கோர்␢ உமது கண்முன் நிற்க மாட்டார்;␢ தீங்கிழைக்கும் அனைவரையும்␢ நீர் வெறுக்கின்றீர்.⁾
6⁽பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்;␢ கொலை வெறியரையும் வஞ்சகரையும்␢ அருவருக்கின்றீர்.⁾
7⁽நானோ உம் பேரருளால்␢ உமது இல்லம் சென்றிடுவேன்;␢ உம் திருத்தூயகத்தை நோக்கி␢ இறையச்சத்துடன்␢ உம்மைப் பணிந்திடுவேன்;⁾
8⁽ஆண்டவரே, எனக்குப் பகைவர்␢ பலர் இருப்பதால்,␢ உமது நீதியின் பாதையில்␢ என்னை நடத்தும்;␢ உமது செம்மையான வழியை␢ எனக்குக் காட்டியருளும்.⁾
9⁽ஏனெனில், அவர்கள் வாயில்␢ உண்மை இல்லை; அவர்கள் உள்ளம் § அழிவை உண்டாக்கும்;␢ அவர்கள் தொண்டை திறந்த பிணக்குழி;␢ அவர்கள் நா வஞ்சகம் பேசும்.⁾
10⁽கடவுளே, அவர்களின் குற்றங்களுக்குரிய␢ தண்டனையை அவர்களுக்கு அளியும்;␢ அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளாலேயே␢ வீழ்ச்சியுறட்டும்;␢ அவர்களுடைய ஏராளமான␢ தீச்செயல்களை முன்னிட்டு,␢ அவர்களைப் புறம்பே தள்ளிவிடும்.␢ ஏனெனில், அவர்கள்␢ உம்மை எதிர்த்துள்ளார்கள்.⁾
11⁽ஆனால், உம்மிடம் அடைக்கலம் புகுவோர்␢ அனைவரும் மகிழ்வர்;␢ அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர்;␢ நீர் அவர்களைப் பாதுகாப்பீர்;␢ உமது பெயரில் பற்றுடையோர்␢ உம்மில் அக்களிப்பர்.⁾
12⁽ஏனெனில், ஆண்டவரே,␢ நேர்மையாளர்க்கு நீர் ஆசிவழங்குவீர்;␢ கருணை என்னும் கேடயத்தால்␢ அவரை மறைத்துக் காப்பீர்.⁾