திருப்பாடல்கள் 2

முந்திய அடுத்த
1⁽வேற்றினத்தார் சீறி எழுவதேன்?␢ மக்களினங்கள் வீணாகச்␢ சூழ்ச்சி செய்வதேன்?⁾ 2⁽ஆண்டவருக்கும் அவர்தம் அருள் பொழிவு␢ பெற்றவர்க்கும் எதிராகப்␢ பூவுலகின் அரசர்கள்␢ அணிவகுத்து நிற்கின்றார்கள்;␢ ஆள்வோர் ஒன்றுகூடிச்␢ சதிசெய்கின்றார்கள்;⁾ 3⁽‛அவர்கள் பூட்டிய தளைகளைத்␢ தகர்ப்போம்;␢ அவர்கள் வைத்த கண்ணிகளை␢ நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்’ § என்கின்றார்கள்.⁾ 4⁽விண்ணுலகில் வீற்றிருப்பவர்␢ எள்ளி நகைக்கின்றார்;␢ என் தலைவர் அவர்களைப் பார்த்து␢ ஏளனம் செய்கின்றார்.⁾ 5⁽அவர் சினமுற்று␢ அவர்களை மிரட்டுகின்றார்;␢ கடுஞ்சினத்தால் அவர்களைக்␢ கலங்கடிக்கின்றார்;⁾ 6⁽‛என் திருமலையாகிய சீயோனில்␢ நானே என் அரசரைத்␢ திருநிலைப்படுத்தினேன்.’⁾ 7⁽ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை␢ நான் அறிவிக்கின்றேன்;␢ ‛நீர் என் மைந்தர்; இன்று நான்␢ உம்மைப் பெற்றெடுத்தேன்.⁾ 8⁽நீர் விரும்புவதை என்னிடம் கேளும்;␢ பிற நாடுகளை உமக்கு␢ உரிமைச் சொத்தாக்குவேன்;␢ பூவுலகை அதன் கடையெல்லைவரை␢ உமக்கு உடைமையாக்குவேன்.⁾ 9⁽இருப்புக் கோலால்␢ நீர் அவர்களைத் தாக்குவீர்;␢ குயவன் கலத்தைப்போல␢ அவர்களை நொறுக்குவீர்.’⁾ 10⁽ஆகவே, மன்னர்களே,␢ விவேகமாக நடந்துகொள்ளுங்கள்;␢ பூவுலகை ஆள்வோரே,␢ எச்சரிக்கையாயிருங்கள்.⁾ 11⁽அச்சத்தோடு ஆண்டவரை␢ வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்!␢ அவர்முன் அகமகிழுங்கள்!⁾ 12⁽அவர் சினங்கொள்ளாதபடியும்␢ நீங்கள் வழியில் அழியாதபடியும்␢ அவரது காலடியை முத்தமிடுங்கள்;␢ இல்லையேல், அவரது சினம்␢ விரைவில் பற்றியெரியும்;␢ அவரிடம் அடைக்கலம் புகுவோர்␢ அனைவரும் பேறுபெற்றோர்.⁾