திருப்பாடல்கள் 45

முந்திய அடுத்த
1⁽மன்னரைக் குறித்து யான்␢ கவிதை புனைகின்ற போழ்து,␢ இனியதொரு செய்தியால்␢ என் நெஞ்சம் ததும்பி வழிகின்றது;␢ திறன்மிகு கவிஞரின் எழுதுகோலென␢ என் நாவும் ஆகிடுமே!⁾ 2⁽மானிட மைந்தருள்␢ பேரழகுப் பெருமகன் நீர்;␢ உம் இதழினின்று அருள் வெள்ளம்␢ பாய்ந்துவரும்;␢ கடவுள் உமக்கு என்றென்றும்␢ ஆசி வழங்குகின்றார்.⁾ 3⁽வீரமிகு மன்னா! மாட்சியொடு␢ உம் மாண்பும் துலங்கிடவே,␢ உம் இடையினிலே வீரவாள் தாங்கி வாரும்!⁾ 4⁽உண்மையைக் காத்திட,␢ நீதியை நிலைநாட்டிட,␢ மாண்புடன் வெற்றிவாகை சூடி வாரும்!␢ உம் வலக்கை␢ அச்சமிகு செயல்களை ஆற்றுவதாக!⁾ 5⁽உம்முடைய கணைகள் கூரியன;␢ மன்னர்தம் மாற்றாரின்␢ நெஞ்சினிலே பாய்வன; மக்களெல்லாம்␢ உம் காலடியில் வீழ்ந்திடுவர்.⁾ 6⁽இறைவனே, என்றுமுளது␢ உமது அரியணை;␢ உமது ஆட்சியின் செங்கோல்␢ வளையாத செங்கோல்.⁾ 7⁽நீதியே உமது விருப்பம்;␢ அநீதி உமக்கு வெறுப்பு;␢ எனவே கடவுள், உமக்கே உரிய கடவுள்,␢ மகிழ்ச்சியின் நெய்யால்␢ உமக்குத் திருப்பொழிவு செய்து,␢ உம் அரசத் தோழரினும் மேலாய்␢ உம்மை உயர்த்தினார்.⁾ 8⁽நறுமணத் துகள், அகிலொடு␢ இலவங்கத்தின் மணங்கமழும்␢ உம் ஆடையெலாம்;␢ தந்தம் இழைத்த மாளிகைதனிலே␢ யாழிசை உம்மை மகிழ்விக்கும்.⁾ 9⁽அருமைமிகு அரசிள மகளிர்␢ உம்மை எதிர்கொள்வர்;␢ ஓபீரின் பொன் அணிந்து␢ வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் § பட்டத்து அரசி!⁾ 10⁽கேளாய் மகளே! கருத்தாய்க்␢ காதுகொடுத்துக் கேள்!␢ உன் இனத்தாரை மறந்துவிடு;␢ பிறந்தகம் மறந்துவிடு.⁾ 11⁽உனது எழிலில்␢ நாட்டங்கொள்வார் மன்னர்;␢ உன் தலைவர் அவரே;␢ அவரைப் பணிந்திடு!⁾ 12⁽தீர் நகர மக்கள் பரிசில் பல ஏந்தி நிற்பர்;␢ செல்வமிகு சீமான்கள்␢ உன்னருள் வேண்டி நிற்பர்.⁾ 13⁽அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி␢ தங்கமிழைத்த உடையணிந்து␢ தோன்றிடுவாள்.⁾ 14⁽பலவண்ணப் பட்டுடுத்தி␢ மன்னரிடம் அவளை அழைத்து வருவர்;␢ கன்னித் தோழியர் புடைசூழ␢ அவள் அடியெடுத்து வந்திடுவாள்.⁾ 15⁽மன்னவரின் மாளிகைக்குள்␢ நுழையும்போது அவர்கள்␢ மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும்␢ அழைத்து வரப்படுவர்.⁾ 16⁽உம் தந்தையரின் அரியணையில்␢ உம் மைந்தரே வீற்றிருப்பர்;␢ அவர்களை நீர் உலகுக்கெலாம்␢ இளவரசர் ஆக்கிடுவீர்.⁾ 17⁽என் பாடல் வழிவழியாய்␢ உம் பெயரை நிலைக்கச் செய்யும்;␢ ஆகையால், எல்லா இனத்தாரும்␢ உமை வாழ்த்திடுவர்.⁾